ஐரோப்பா

உக்ரைனுக்கு இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவி: நேட்டோ நட்பு நாடுகள் அறிவிப்பு

நேட்டோ நட்பு நாடுகள் உக்ரைனுக்கு முக்கிய இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்குவதாக அறிவித்துளளது. 2024 இல் உக்ரைனுக்கு “பில்லியன் கணக்கான யூரோக்கள் கூடுதல் திறன்களை” வழங்குவதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது. நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவின் தாக்குதல்களை கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும், உக்ரைனின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

மணி ரத்னம் சொன்னால் விமானத்தின் மீது கூட ஏறி ‘தைய தையா’ஆடுவேன் – ஷாருக்கான்

  • January 11, 2024
  • 0 Comments

மணி ரத்னம் சொன்னால் விமானத்தின் மீது கூட ஏறி ‘தைய தையா’ பாடலுக்கு நடனமாடுவேன் என ஷாருக்கான் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றின் விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், இயக்குநர் மணி ரத்னம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற நடிகர் ஷாருக்கான் மற்றும் மணி ரத்னம் இடையில் நடந்த சுவாரஸ்யமான உரையாடல்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விருதைப் […]

ஆசியா

பாகிஸ்தானில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்: 36 குழந்தைகள் பலி..!

  • January 11, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் பலியாகி உள்ளனர் . மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ம் திகதி வரை பள்ளிகளில் காலை அசெம்பிளி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ச மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் கட்டாயம்முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமல், […]

வட அமெரிக்கா

மாடுகளுக்கு பீர் ஊற்றி வளர்க்கும் மார்க்… இறைச்சி விற்பனையில் ஈடுபட திட்டம் !

  • January 11, 2024
  • 0 Comments

உலகிலேயே மிகவும் சுவையான தரமான மாட்டிறைச்சியை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக மெட்டா மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார் உலகின் முன்னணி சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் உள்ளவர் மார்க் ஜூக்கர்பர்க். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்தில் இருப்பதோடு, பிரபலமானவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளவர். இவர் மெட்டா நிறுவனத்தின் மூலம் மென்பொருள், அது சார்ந்த கருவிகள் […]

இலங்கை

இலங்கையில் டின் மீன் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த பணிப்புரை

வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில் அமைச்சருக்கும் டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மைய மாதங்களில் சுமார் 8,000 தொன் டின் மீன் இறக்குமதியானது உள்நாட்டு விற்பனையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் டின் மீன் உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான […]

பொழுதுபோக்கு

மம்மூட்டியின் பேய் படம்.. பிரம்மயுகம் டீசர் வெளியானது…

  • January 11, 2024
  • 0 Comments

நடிகர் மம்மூட்டி செம ஸ்பீடாக படங்களை வெளியிடுகின்றார். கடந்த நவம்பர் மாதம் தான் ஜோதிகா மற்றும் மம்மூட்டி நடித்த காதல் தி கோர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான அந்த படத்துக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், அடுத்து பேய் படமாக உருவாகி உள்ள பிரம்மயுகம் படத்தின் டீசரை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்திருக்கிறார் மம்மூட்டி. பிரம்மயுகம் படத்தை விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் […]

இலங்கை

கிடப்பில் போட்டப்பட்டது குருந்தூர்மலை வழக்கு!

  • January 11, 2024
  • 0 Comments

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதிவழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக […]

இலங்கை

யாழில் 86 கோடி பெறுமதியான அபின் போதைப்பொருள் மீட்பு

வடக்கில் முதல்முறையாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளது 48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் […]

இலங்கை

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!

  • January 11, 2024
  • 0 Comments

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் இடம் பெற்ற முற்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் காயமடைந்துள்ளார். திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி இன்று (11.01) மாலை 5.30 மணியளவில் பயணித்து கொண்டிருந்த முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. யுக்திய திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த முச்சக்கர வண்டி தடுமாற்றத்தில் நிறுத்த முற்பட்டபோது வீதியை விட்டி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது. இதனை அடுத்து […]

உலகம்

ஸ்பெயினுக்குச் செல்ல முயன்று ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் உயிரிழப்பு

கடந்த ஆண்டு ஸ்பெயினின் கரையை அடைய முயற்சித்தபோது ஒரு நாளைக்கு 18 பேர் இறந்தனர் அல்லது காணாமல் போனதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் இத்தனை தெரிவித்துள்ளது. இறந்த 6,618 பேரில் 384 குழந்தைகளும் அடங்குவர் என்று சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளளது. பலர் ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயற்சிக்கின்றனர். எனவும் தெரிவிக்கப்பட்டுளளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்காகும், இது 2007 ஆம் ஆண்டில் அமைப்பு கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து […]