இலங்கை

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி வரோதயநகர் பகுதியில் இடம் பெற்ற முற்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி இன்று (11.01) மாலை 5.30 மணியளவில் பயணித்து கொண்டிருந்த முற்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

யுக்திய திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த முச்சக்கர வண்டி தடுமாற்றத்தில் நிறுத்த முற்பட்டபோது வீதியை விட்டி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் விரைந்து வந்து சாரதியை சோதனையிட்டதையும் காணக் கூடியதாக இருந்தது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்து பௌத்த பிக்கு இருவரில் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிய வருகின்றது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்