இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் (நேரலை)
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு-காலி முகத்திடலில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு-காலி முகத்திடலில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் படிப்புகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சமூக வலைதளங்களில் உயர்தர வேளாண் அறிவியல் தாள் கசிந்ததால் வினாத்தாளை ரத்து செய்துவிட்டு மீண்டும் பரீட்சை பெப்ரவரி முதலாம் திகதி நடத்த பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்திருந்தது. அதன்படி, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடங்க இருந்த அடுத்த பாடசாலைதவணை […]
நீரில் பரவும் பாக்டீரியாவின் கொடிய திரிபு காரணமாக ஆஸ்திரேலியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கொடிய பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மேலும் 22 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெலியோடோசிஸ் எனப்படும் கொடிய பாக்டீரியாக்கள் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு சுகாதார எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால், கடுமையான நிமோனியா அல்லது இரத்த விஷம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தண்ணீரில் ஆழமான பாக்டீரியாவால் ஏற்படும் நோய், இது கனமழையின் போது மேற்பரப்புக்கு வரலாம். குயின்ஸ்லாந்து அதிகாரிகள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள […]
Google நிறுவனம் தனது ‘கூகுள் மேப்ஸ்’ (Google maps) சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. தனது எல்லா சேவைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பத்தை உட்புகுத்தும் Google, கூகுள் மேப்ஸிலும் ஏஐ வசதியை இணைக்கவுள்ளது. இதுவரை Google மேப்ஸ்-ல் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேடினால் அந்த இடம் குறித்த தகவல்களும், வழிகளும் கிடைக்கும். ஆனால் Google மேப்ஸ்-ன் இந்த செய்யறிவு தொழில்நுட்பத்துடனான பரிணாமத்தில் நீங்கள் உரையாடல்கள் மூலம் இடங்கள் குறித்த தகவல்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ‘எனக்கு மஞ்சள் […]
நாகூரில் நடைபெறும் திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக இன்று விமான மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வருகை தந்த நடிகர் எஸ்.வி.சேகர் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய அளவில் மீண்டும் பிரதமர் ஆவார். ஆனால் தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாக தான் இருக்கும். அண்ணாமலை ஒரு குழந்தைத்தனமாக செயல்பட்டு வருகிறார். அரை […]
பிரான்ஸ் சிறைச்சாலைகளில் இதுவரை இல்லாத அளவு அதிகளவான கைதிகளால் நிரம்பி வழிவதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டை விட 5% சதவீதத்துக்கும் அதிகமாக கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஜனவரி முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்டஆய்வின் படி 72,173 கைதிகள் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 5.2% சதவீதம் அதிமாகும். 60,975 கைதிகளுக்கான இடவசதி மட்டுமே பிரெஞ்சு சிறைச்சாலைகளில் உள்ள நிலையில், இந்த மேலதிக கைதிகளால் சிறைச்சாலைகள் போதிய சுகாதாரமற்று காணப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜனாதிபதி […]
திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா நா.த.க நிர்வாகிகள் இல்லத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது – அவை யாருக்கு எதிராக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என தெரிய வேண்டும். தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என வினவிய H. ராஜா தமிழக காவல். துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள் பாரபட்ச செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறை பாஜகவினரை […]
ஜெர்மனியில் கடந்த சில வாரங்களுக்கு முதல் அதிதீவிர வலது சாரி கட்சியான AFD கட்சியினர் மற்றும் ஒஸ்ரியா நாட்டினுடைய இரண்டிடேக்விவேகெம் என்று சொல்லப்படுகின்ற மேலும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு ஜெர்மனியின் நகரமான போஸ்டமில் ஓர் கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்கள். இந்த கூட்டத்தில் ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியான CDU என்று சொல்லப்படுகின்ற சில அரசியல் பிரமுகரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களுக்கு எதிரான […]
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. சுமார் 600 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார். எவ்வாறாயினும், கடுமையான குற்றங்களை புரிந்தோர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்களென அவர் கூறினார். ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட மற்றும் அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார். […]
அக்டோபர் 7 ஆம் திகதி காஸாவில் போர் வெடித்ததில் இருந்து, உலகளவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உலகளவில் அதிகரித்து வருவதாக போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள எனது யூத சகோதர சகோதரிகளுக்கு எழுதிய கடிதத்தில், உலகெங்கிலும் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களின் கொடூரமான அதிகரிப்பு குறித்து கத்தோலிக்கர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர் என்று போப் எழுதியுள்ளார். காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த போர், மக்கள் கருத்தைப் பிளவுபடுத்தி, உலகெங்கிலும் உள்ள மக்களின் அணுகுமுறையை மாற்றியுள்ளது. […]