இந்தியா

இந்தியாவின் கார்கில் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • February 4, 2024
  • 0 Comments

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், உயிர்ச்சேதமோ, உடமைச் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தியா

போரில் குழந்தைகளை இழந்தும் குறையாத நெஞ்சுரம்… பாலஸ்தீன செய்தியாளரை கௌரவப்படுத்தவுள்ள கேரளா மீடியா அக்காடமி !

  • February 4, 2024
  • 0 Comments

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பின்னும் களத்தில் நின்ற செய்தியாளருக்கு சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கி கேரளா அரசு கௌரவிக்க உள்ளது. காசா பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு முழு வீச்சில் போரைத் துவங்கி நடத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடரும் குண்டு வீச்சு சம்பவங்களால் இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. […]

பொழுதுபோக்கு

“கடைசி விவசாயி” படத்தின் நடிகை அடித்துக் கொலை – பரபரப்பு செய்தி

  • February 4, 2024
  • 0 Comments

‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை, அவரின் மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்சாமி மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நாமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் நாமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் […]

இலங்கை

கறுப்பு சுதந்திர தினம் ; மட்டக்களப்பில் முன்னெடுக்கப்ட்ட மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

  • February 4, 2024
  • 0 Comments

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் இந்த நாட்டில் தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்காத நிலையில் இந்த நாளை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டம் […]

இலங்கை

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுதந்திரத்தின கொண்டாட்டங்கள்!

  • February 4, 2024
  • 0 Comments

முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின் தேசிய கொடியினை அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிட்டும் இன்றையதினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா

விஜயின் கட்சிக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவிப்பு!

  • February 4, 2024
  • 0 Comments

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம் 12ஆம் திகதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், […]

ஆசியா

யேமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்கள்: மத்திய கிழக்கிற்கு ஹமாஸ் எச்சரிக்கை

யேமன் மீதான அமெரிக்க மற்றும் பிரித்தானிய தாக்குதல்களின் அலையை ஹமாஸ் கண்டித்துள்ளது, தாக்குதல்கள் மத்திய கிழக்கில் “மேலும் கொந்தளிப்பை” கொண்டு வரும் என்று எச்சரித்துள்ளது. கடந்த வார இறுதியில் அமெரிக்க துருப்புக்கள் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு ஈரானுடன் தொடர்புடைய குழுக்களுக்கு எதிரான முக்கிய அமெரிக்க நடவடிக்கைகளின் இரண்டாவது நாளில், சனிக்கிழமையன்று யேமனில் 36 ஹவுதி இலக்குகளுக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தனியாவும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு

கவுண்டமணி இப்படிப்பட்டவரா? சுகன்யா ஓபன் டாக்

  • February 4, 2024
  • 0 Comments

90களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுகன்யா. சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த இவர் சில சீரியல்களில் நடித்தார். தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுகன்யா,பிரபல நடிகர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதில், “கவுண்டமணி சார் சினிமாவில் பார்ப்பது போல் இல்லை. சினிமாவில் அவர் காமெடியாக பேசிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் […]

உலகம்

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் ஆட்சேர்ப்பு பற்றிய கவலைகளுக்குப் பிறகு பல்கலைக்கழக சேர்க்கை செயல்முறைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன. அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தி வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்காக பல்கலைக்கழகங்கள் தரத்தை குறைத்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. 142 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் ஒரு அறிக்கையில் “சமீபத்திய வாரங்களில் சர்வதேச மாணவர்கள் தொடர்பான ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது. இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் பிரித்தானிய மாணவர் […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூர்ந்து கறுப்பு கொடி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.