இலங்கை : கம்பளை பாடசாலையில் மரம் முறிந்து வீழ்ந்து விபத்து : மற்றுமொரு குழந்தையும் பலி!
கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தையொன்று இன்று (10.02) உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கட்கிழமை சர்வதேச பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் காயமடைந்ததுடன், ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை […]













