இலங்கை

இலங்கை : கம்பளை பாடசாலையில் மரம் முறிந்து வீழ்ந்து விபத்து : மற்றுமொரு குழந்தையும் பலி!

கம்பளை பிரதேசத்தில் உள்ள  பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தையொன்று இன்று (10.02) உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை சர்வதேச பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் காயமடைந்ததுடன், ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ஏனைய இரண்டு பிள்ளைகளும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்று 05 நாட்களுக்கு பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளது.

கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 5 வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்