இலங்கை

கொட்டகெத்தன இரட்டைக் கொலை : குற்றவாளிக்கு மரண தண்டனை!

கொட்டகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த தீர்ப்பை இன்று (19) வழங்கினார். 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி கொட்டகெத்தன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீல் லக்ஷ்மன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை – இதுவரை 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

  • February 19, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் இதுவரை 64,850 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுக்காக 56,140 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியலில் இருந்த 8,710 சந்தேக நபர்கள் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 56,140 சந்தேக நபர்களில், 1,850 சந்தேகநபர்கள் தடுப்பு உத்தரவுகளின் அடிப்படையில் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2,009 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 234 சந்தேகநபர்கள் விசாரணைக்கு […]

பொழுதுபோக்கு

இன்னும் 2 நாளில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன்… கமல் கொடுத்த அப்டேட்

  • February 19, 2024
  • 0 Comments

சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் படம் தான் Thug Life. இந்த திரைப்படம் தற்கால கதை களத்தை கொண்ட படமாகத் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்து வந்த Thuggees என்பவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் அந்த திரைப்படத்திற்கான சில பணிகளை அமெரிக்காவில் முடித்துவிட்டு […]

இலங்கை

மத்திய வங்கி ஊழியர்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம்? : நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

  • February 19, 2024
  • 0 Comments

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் அதிகாரம் வங்கிச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன நிறுவனமாக மத்திய வங்கிக்கே வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, அந்த ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்காது என்றார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்தச் சட்டத்தின்படி, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் அனைத்து மத்திய […]

வட அமெரிக்கா

கனடா- ஒன்ராறியோவில் இந்திய மாணவர் மாரடைப்பால் மரணம்..

  • February 19, 2024
  • 0 Comments

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது பெற்றோர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்கள். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துவந்தவர் ஷேக் முஸாம்மில் அஹமது (25). ஹைதராபாதைச் சேர்ந்த ஷேக்குக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் காய்ச்சலால் அவதியுற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது நண்பர்களில் ஒருவர், இந்தியாவிலிருக்கும் ஷேக்கின் பெற்றோருக்கு தொலைபேசியில் […]

இலங்கை

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் கையெழுத்தாகவுள்ள புதிய ஒப்பந்தம்!

  • February 19, 2024
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சீனா மற்றும் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தின் இறுதிப் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கு இடையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் மூலம் தங்கள் வேலைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற சந்தேகம் காரணமாக சில துறைகளில் இந்த ஒப்பந்தம் குறித்து பெரும் […]

பொழுதுபோக்கு

கம்பேக் கொடுக்கும் கவுண்டமணி… ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!!

  • February 19, 2024
  • 0 Comments

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி நடித்து வரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் எண்பதுகளில் நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பதற்காகவே படம் பார்க்க வந்தவர்கள் நிறைய பேர். இன்றளவும் அவரது நகைச்சுவைக் காட்சிகளை ரீப்பீட் மோடில் பார்த்து ரிலாக்ஸ் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில், நீண்ட வருடங்களாக மீடியாவில் அதிகம் தலைக்காட்டாமல் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கவுண்டமணி தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் மூலமாக கம்பேக் கொடுக்கிறார். […]

இலங்கை

இலங்கையில் காணி வாங்க காத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!

  • February 19, 2024
  • 0 Comments

இலங்கையில் காணிச் சந்தையை திறக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட சொந்தமில்லாத 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கியதன் மூலமும் அரச பெருந்தோட்டக்  கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத காணிகளையும் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்ததன் மூலமும் இந்த நிலைமை ஏற்படுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை இதுவரை திறந்த சந்தையாக இருந்த காணி வர்த்தகம் மூடப்படுவதன் மூலம் இந்நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 20 […]

இலங்கை

எலியால் ஏற்பட்ட வாக்குவாதம் – மயங்கி விழுந்து ஒருவர் பலி!

  • February 19, 2024
  • 0 Comments

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வசிக்கும் வீட்டினுள் எலி புகுந்தது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மயங்கி விழுந்து இளைய சகோதரர் சிகிச்சைக்காக தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும் எகொடவத்தை ஆராச்சியைச் சேர்ந்த அனுர கித்சிறி என்ற (59) வயதுடைய ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார், மூத்த சகோதரன் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் இந்த சூப்பர்ஹிட் படம் மொத்தமும் காப்பியா??? சிக்கானார்… வைரலாகும் வீடியோ

  • February 19, 2024
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் இதுவரை லியோ மற்றும் மாஸ்டர் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் முதல் முறையாக விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் கைகோர்த்த படம் தான் மாஸ்டர். இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதுவும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றிபெற்ற […]