உலகம்

ஆளுநர்களுக்கு உக்ரைன் விஷம் கொடுத்ததாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு

உக்ரைனின் கெர்சன் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் மாஸ்கோவில் நிறுவப்பட்ட ஆளுநர்கள் மீது உக்ரைன் விஷம் வைத்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டியுளளது. டிசம்பர் 2023 இல் மாஸ்கோவால் நியமிக்கப்பட்ட லுஹான்ஸ்க் கவர்னர் லியோனிட் பசெக்னிக் மற்றும் ஆகஸ்ட் 2022 இல் கெர்சன் தலைவர் விளாடிமிர் சால்டோ ஆகியோருக்கு உக்ரைன் விஷம் கொடுத்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கெர்சன் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் நான்கு உக்ரேனிய மாகாணங்களில் அடங்கும், அவை எதையும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும், செப்டம்பர் 2022 இல் […]

ஆசியா செய்தி

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இந்தோனேசியாவின் புதிய ஜனாதிபதி

  • February 19, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் உயரத்திற்கு மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டார். மேலும், பிரதமர் மோடியுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். சமூக ஊடகமான ‘X’ இல் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ள ஜனாதிபதி சுபியாண்டோ, “பிரதமர் @narendramodi, எங்கள் தேர்தல்களுக்கு உங்கள் வாழ்த்துச் செய்திக்கு நன்றி. இந்தோனேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான மூலோபாய […]

விளையாட்டு

AFGvsSL – ஆப்கான் அணிக்கு 188 ஓட்ட வெற்றியிலக்கு

  • February 19, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்கிரம 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஏஞ்சலோ […]

இந்தியா

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நீரிழப்பு மற்றும் வயிற்றுத் தொற்று பிரச்சினைகள் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பிரியங்கா காந்தி, “பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தரபிரதேசம் சென்றடைவதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக இன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று. உடல்நலம் தேறியவுடன் யாத்திரையில் இணைவேன்” என்று […]

ஐரோப்பா

ஜப்பான் உக்ரைன் இடையில் சுமார் 56 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

ஜப்பானும் உக்ரைனும் இன்று போருக்குப் பிந்தைய மீட்பு உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 56 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. டோக்கியோவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் புனரமைப்புக்கான ஜப்பான்-உக்ரைன் மாநாட்டின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மாநாட்டில் உரையாற்றிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, உக்ரைனில் இன்னும் சண்டை நடந்து வருவதாகவும், “நிலைமை எளிதானது அல்ல” என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் இந்த மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி டோக்கியோ ஒரு நாள் மாநாட்டை நடத்தியது. இரு தரப்பிலிருந்தும் சுமார் […]

இலங்கை

இராகலை – வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர்… எடுத்த விபரீத முடிவு!

  • February 19, 2024
  • 0 Comments

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை மேற்பார்வை தோட்டத்தில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை இராகலை பொலிஸார் இன்று (19)மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான (61) வயதுடைய பொண்னையா நாகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மிக நீண்ட நாட்களாக தனக்கு வயிற்று வலியென அவதிப்பட்டு வந்த நிலையில், தனது மூத்த மகனுடன் இன்று (19) காலை வைத்தியசாலைக்கு சென்று மருந்து பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய இவர், தனது வீட்டில் […]

பொழுதுபோக்கு

தனுஷின் ‘டி50’- ‘ராயன்’படத்தின் முதல் பார்வை வெளியானது!

  • February 19, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் முதல் பார்வை வெளியானது. இதனை ரசிகர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் தன் உருவத்திற்காக பல கேலிகளைச் சந்தித்தவர் நடிகர் தனுஷ். அதன் பிறகு தனது திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பலதுறைகளிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இப்படி சினிமாவில் அவமானங்களைச் சந்தித்து வெற்றிப் பெற்றவருக்கு நடிகராக […]

இலங்கை

தலைமன்னார் சிறுமி படுகொலை! – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

  • February 19, 2024
  • 0 Comments

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (19) மதியம் உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை […]

ஐரோப்பா

24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம்..அரசாங்கத்தை ஏமாற்றி 3.68 கோடி பலன் அடைந்த இத்தாலிய பெண்!

  • February 19, 2024
  • 0 Comments

இத்தாலியில், அரசு வழங்கும் மகப்பேறு நிதியுதவியை மோசடியாக பெற்று வாழ்க்கையில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்த ஒரு பெண், கடைசியில் மோசடி அம்பலமானதால் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த பார்பரா ஐயோல் ( 50), என்ற பெண், வேலை செய்த நிறுவனங்களையும், அரசையும் சுமார் 24 ஆண்டுகளாக ஏமாற்றி மகப்பேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம் தரித்ததாகவும், இதில் 5 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், 12 முறை கரு கலைந்ததாகவும் […]

இலங்கை

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் அகழ்வு பணி!

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் திங்கட்கிழமை (19) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு – குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்த நிலையில் திங்கட்கிழமை […]