இலங்கை

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவுறுத்தல்!

  • February 23, 2024
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணி ஒருவரை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக காட்டு யானைக்கு அருகில் சென்றுள்ளனர். இது ஆபத்தான செயற்பாடாகும் எனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வீதியின் அருகே […]

இலங்கை

திருமலையில் தென்னைமரவாடி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு தடுத்துநிறுத்தம்

  • February 23, 2024
  • 0 Comments

திருகோணமலை தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை இன்று (23) தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த […]

இலங்கை

இலங்கையில் முழுவதும் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் சேவையில் உள்ளதாக தகவல்!

  • February 23, 2024
  • 0 Comments

நாடு முழுவதும் சுமார் 50,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை ஒழுங்குபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய சங்கம் தெரிவித்துள்ளது. அங்கு பேசிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் டாக்டர் பிரசாத் ஹேரத், ஒவ்வொரு நகரத்தின் முக்கிய கிராமங்களிலும் தோராயமாக மூன்று முதல் நான்கு போலி வைத்தியர்கள் உள்ளனர். சில மருந்துக் கடைகளின் செயற்பாடுகள் சுகாதாரத் துறைக்கு பெரும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவின் தென் துருவத்தில் விமானத்தை தரையிறக்கி சாதனை!

  • February 23, 2024
  • 0 Comments

நிலவின் தென் துருவத்தில் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்க அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றுள்ளது. நிலவில் ஒரு தனியார் நிறுவனம் விண்கலத்தை தரையிறக்குவது இதுவே முதல் முறை, மேலும் 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 52 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா சந்திரனில் விண்கலத்தை தரையிறக்குவது இதுவே முதல் முறை. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் என்ற தனியார் நிறுவனம் கடந்த வாரம் தனது முதல் நிலவு பயணத்தை தொடங்கியது. அதன் கீழ் கடந்த […]

பொழுதுபோக்கு

பிரம்மாண்டதிட்டம்… விஜய்யின் முதல் மாநாடு எங்க தெரியுமா?

  • February 23, 2024
  • 0 Comments

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருந்தார். ஆனாலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடப் போவதில்லை என்பதை அறிவித்துவிட்டார். அதாவது 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தான் தளபதி களமிறங்க இருக்கிறார். இப்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் சினிமா கேரியரை முடித்துக் கொள்ள இருக்கிறார். அதன்பிறகு முழு நேர அரசியலில் […]

இலங்கை

1000 வேன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • February 23, 2024
  • 0 Comments

சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பிரேரணைகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதற்கமைய, சுமார் ஆயிரம் வேன்களையும் கார்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டார்.

இந்தியா

டெல்லி- 2,300 ரூபாய்க்காக நடந்த கொலை: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

  • February 23, 2024
  • 0 Comments

டெல்லியில் ரூ.2,300 பணத்துக்காக 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உள்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் ரூ.2,300 பணத்துக்காக, ஏற்பட்ட தகராறில் பிரியன்ஷு (20) என்ற இளைஞரை, சுற்றி வளைத்து கடுமையாக சிலர் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி பிரியன்ஷு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் பிரியன்ஷுவின் நண்பர் ஜெய்கிஷன் […]

இலங்கை

கஞ்சா கலந்த மதனமோதக தொகை மீட்பு!- இளைஞர் ஒருவர் கைது

  • February 23, 2024
  • 0 Comments

சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்குரக்கொட நகரின் இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 671 மதனமோதக பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செய்தி

சீனாவில் அதிர்ச்சி – கப்பல் மோதியதில் இரண்டாக உடைந்த பாலம்… 5 பேர் பலி

  • February 23, 2024
  • 0 Comments

சீனாவின் குவாங்சூ நகரில் பாலத்தின் மீது கப்பல் மோதிய விபத்தில் பாலம் இரண்டாக உடைந்துள்ளது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர். நன்ஷா மாவட்டத்தில் உள்ள லிக்சின்ஷா பாலத்தின் தூண்களுக்கு நடுவே கடந்து செல்ல முயன்ற கப்பல் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து மோதியது. இதில் பாலம் இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கியது. அப்போது பாலத்தில் வாகனங்களில் சென்று கொண்டிருந்த சிலர் கடலிலும், கப்பலிலும் விழுந்தனர். இவர்களில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், படுகாயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]

செய்தி

அமெரிக்காவில் 1,50,000 மாணவர்களின் கடன்கள் இரத்து – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

  • February 23, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் 1,50,000 மாணவர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. 12 ஆயிரம் டொலருக்கும் குறைவாக கடன் பெற்று 10 ஆண்டுகளாக திருப்பிச் செலுத்தி வந்த மாணவர்களின் கடனே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், புதிய திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் கடனை ரத்து செய்வதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படும் என அறிவித்துள்ள ஜோ பைடன், இத்திட்டத்தின்படி […]