வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

  • February 23, 2024
  • 0 Comments

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக அவசியமானது இதற்காக நாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் ஆனால் இந்த ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதற்கு மிகக் குறைந்த நேரமும் அதிக பயன்களையும் பெற முடியும் அது என்னவெல்லாம் என்று ஸ்கிப்பிங் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் : தினமும் ஸ்கிப்பிங் செய்யும் போது குறுகிய காலத்தில் நம் உடலில் அனைத்து பாகங்களிலும் உள்ள தேவையற்ற […]

இலங்கை

கொழும்பு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  • February 23, 2024
  • 0 Comments

கொழும்பு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, மேல் மாகாணத்தில் கம்பஹா, வடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம், வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், பொலன்னறுவை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் அவதான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த மாவட்டங்களில் வெப்பக் குறியீடு 39 முதல் 45 வரை காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக வெயிலில் படுவதும், […]

விளையாட்டு

4-வது டெஸ்ட்… Toss வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு..!

  • February 23, 2024
  • 0 Comments

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் இன்றை டெஸ்ட் போட்டி மூலம் சர்வேதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார். இந்திய அணி வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், […]

ஐரோப்பா

ஸ்பெயினை உலுக்கிய தீ விபத்து – 4 பேர் பலி – 14 பேர் காயம்

  • February 23, 2024
  • 0 Comments

ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 138 வீடுகள் உள்ளதாகவும், அதில் 450 பேர் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. தீ பரவ ஆரம்பித்த சிறிது நேரத்தில், கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியது, […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT பயனாளர்களுக்கு அதிர்ச்சி – பிழையான பதில் கிடைப்பதால் குழப்பம்

  • February 23, 2024
  • 0 Comments

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது ‘கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்கும்’ என்ற நம்பிக்கை பலருக்கு… தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாற்றால் பலருக்கு அர்த்தமில்லாத பதில்கள் மட்டுமே கிடைத்தன. வழக்கத்தில் இல்லாத வார்த்தைகள்..முழுமை அடையாத வாக்கியங்கள் போன்றவை பதிலாக வழங்கப்பட்டன. பிரச்சினை சுமார் 16 மணி நேரம் நீடித்தது… ‘ChatGPTக்குப் பேய் பிடித்தவிட்டது போல இருந்தது’ என்று மென்பொருள் நிபுணர்கள் சிலர் கூறினர். கோளாற்றைச் சீர்செய்த பிறகே ChatGPT வழக்கநிலைக்குத் திரும்பியது. OpenAI நிறுவனம் தொழில்நுட்பத்தைக் கடந்த […]

இலங்கை

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

  • February 23, 2024
  • 0 Comments

பம்பலப்பிட்டி, மிலாகிரிய அவென்யூ, Asian Court அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாவது மாடியில் இருந்து வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 74 வயதுடைய ஜெயானந்தன் வேலு அம்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • February 23, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அதிக உற்பத்தித்திறனுக்கான நெகிழ்வான பணி ஏற்பாடுகளை தனது அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் வழங்கிய சேவை செயல்திறன் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவோருக்கு வாய்ப்பு மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது மற்றும் பணியிடத்திற்குச் செல்வதற்கான நேரத்தைக் குறைப்பது இதன் நோக்கமாகும். பலர் வேலைக்காக வரும்போது பணியிடத்திற்கு […]

இலங்கை

இலங்கையில் அறிமுகமாகும் E-Passport சேவை

  • February 23, 2024
  • 0 Comments

இலங்கையில் E-Passport சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போது நிலவும் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள […]

ஐரோப்பா

பிரான்ஸில் கிடைத்த அதிர்ஷ்டம் – 73.5 மில்லியன் யூரோக்கள் வென்ற நபர்

  • February 23, 2024
  • 0 Comments

பிரான்ஸில் அதிர்ஷ்டலாபச்சீட்டில் 73.5 மில்லியன் யூரோக்கள் வென்ற நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த சீட்டிழுப்பில் இத்தொகை வெல்லப்பட்டுள்ளதாக Euromillions அதிர்ஷ்டலாபச்சீட்டின் தாய் நிறுவனம் அறிவித்துள்ளது. 23, 31, 37, 42 மற்றும் 48 ஆகிய இலக்கங்களுடன், 3 மற்றும் 7 நட்சத்திர குறியீடு இலக்கங்களும் கொண்ட பற்றுச்சீட்டுக்கே இந்த அதிஷ்ட்டத்தொகை வெல்லப்பட்டுள்ளது. இந்த பற்றுச்சீட்டினை கொண்டுள்ளவர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் தங்களது பணத்தை உரிமை கோரலாம் என […]

ஐரோப்பா

ஜெர்மனியில் லட்ச கணக்கிலான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை

  • February 23, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் ஐந்து வருட காலப்பகுதியில் அரை மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஜெர்மனி குடிமக்களாகியுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் சிரியா மற்றும் துருக்கியிலிருந்து மட்டும் வந்தவர்களாகும். 2018 மற்றும் 2022 க்கு இடையில் இயற்கைமயமாக்கல் விகிதங்களின் மொத்த எண்ணிக்கை 651,495 ஐ எட்டியுள்ளது, இந்த புதிய ஜெர்மானியர்கள் இலங்கை உட்பட 169 நாடுகளில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. விரிவாக, சிரியர்கள் மற்றும் துருக்கியர்கள் இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து குடியுரிமைகளில் 23.3 சதவீதம் அல்லது 151,995 […]