இலங்கை

இலங்கையில் சிறைதண்டனை அனுபவிப்பவர்கள் குறித்து வெளியான தகவல்!

  • February 23, 2024
  • 0 Comments

போதைபொருள் பாவனை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 65 வீதமானவர்களே சிறைதண்டனை அனுபவித்து வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர்களில் 1000 முதல் 1500 வரையான சிறுவர்களும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை போதைப் பொருளுக்கு எதிராக பொலிஸார் முன்னெடுத்துள்ள நீதி நடவடிக்கையின் கீழ் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது […]

உலகம்

ஸ்வீடனில் காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஸ்வீடனில் சுமார் 62,000 பேர் கிரிமினல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை தெரிவித்துளளது. அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 10 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நோர்டிக் நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் கொடிய துப்பாக்கிச்சூடு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் தற்போது அண்டை நாடுகளை விட மிக அதிக அளவில் உள்ளது. “14,000 பேர் குற்றவியல் வலையமைப்புகளில் செயலில் உள்ளதாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என்று தேசிய […]

இலங்கை

முல்லைத்தீவில் புதையல் தோண்டிய நால்வருக்கு நேர்ந்தக் கதி!

  • February 23, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் மணல் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த இருவரும், ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஒருவரும், கைவேலி பகுதியை சேர்ந்த ஒருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 45,42,31,30 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் […]

இலங்கை

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, நேற்று (22) முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் […]

இலங்கை

30 மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • February 23, 2024
  • 0 Comments

நாட்டிற்கு 30 மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொழுதுபோக்கு

“வாய்ப்பு கிடைத்தால் தளபதி 69 படத்தை இயக்குவேன்..” கௌதம் மேனன்

  • February 23, 2024
  • 0 Comments

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜோஷ்வா இமை போல் காக்க. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். அவரது சகோதரி மகன் வருண் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்றைய தினம் ரிலீசாக உள்ள நிலையில் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது கௌதம் மேனன் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதன்போது படத்தின் இயக்குனர் கௌதம் மேனனிடம் […]

ஆப்பிரிக்கா

சைபர் தாக்குதல் : கடவுச்சீட்டுக்களை வழங்குவதை நிறுத்திய மலாவி அரசாங்கம்

குடிவரவு சேவையின் கணினி வலையமைப்பில் சைபர் தாக்குதலைத் தொடர்ந்து கடவுச்சீட்டுக்களை வழங்குவதை மலாவி அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா எம்.பி.க்களிடம், திணைக்களத்தின் இலக்கு “தீவிரமான தேசிய பாதுகாப்பு மீறல்” என்று கூறியுள்ளார். ஹேக்கர்கள் கப்பம் கேட்பதை அவர் வெளிப்படுத்தினார். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது எனவும், பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். “பொதுப் பணத்தைக் கொண்டு குற்றவாளிகளை திருப்திபடுத்தும் தொழிலில் நாங்கள் இல்லை, எங்கள் நாட்டைத் தாக்குபவர்களுடன் […]

இலங்கை

கடவுச்சீட்டு தொடர்பில் இலங்கை குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • February 23, 2024
  • 0 Comments

இலங்கையின் சனத்தொகையில் 40 வீதமானோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கிட்டத்தட்ட 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 22 கோடி அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் திணைக்களம் கூறுகிறது. இந்நிலையில் நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த […]

ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்ய ஆளில்லா விமான தாக்குதலில் மூவர் பலி

உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் உள்ள வணிகப் பகுதியை ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவமும் பிராந்திய ஆளுநருமான ஓலே கிப்பர் தெரிவித்தார். ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனில் 31 ஆளில்லா விமானங்களை ஏவியது, வான் பாதுகாப்பு 23 ஐ அழித்ததாக இராணுவம் கூறியுள்ளது. தீயணைப்புப் படையினர் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர், மேலும் அவசரகால குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடியதால் மக்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் – இருவர் பலி

  • February 23, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி விட்டது இந்த சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் கிழக்கு ஜெருசலேம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் 3 பேர் காரில் சென்றவர்கள் மீது […]