மத்திய கிழக்கு

ஹமாஸின் பிடியில் இருந்த இஸ்ரேலிய ராணுவ வீரர் படுகொலை…

  • February 26, 2024
  • 0 Comments

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. […]

இலங்கை

காணி உரிமைக்கு பதிவு செய்ய அவசரத் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

  • February 26, 2024
  • 0 Comments

“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600/ 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான […]

இலங்கை

இலங்கைக்கு வருமானத்தை தேடி தரும் இளநீர்!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கையில் ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு ஏறக்குறைய பத்தாயிரம் இளநீர் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை ஆரஞ்சுக்கு அதிக கிராக்கி காணப்படுவதாகவும், மேலும், பல நாடுகளில் இருந்தும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சுக்கு அதிக கிராக்கி இருப்பதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில் ஆரஞ்சு ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது, கடந்த […]

இலங்கை

இலங்கையில் பொறுப்பற்ற வகையில் செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் : வெளியான கருத்துக்கணிப்பு!

  • February 26, 2024
  • 0 Comments

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களில் 49%, அதாவது பாதி எண்கள் செயல்படாத எண்கள் என ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் தீவு முழுவதையும் உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தீவகத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 589 தொலைபேசி எண்களில் 286, […]

இலங்கை

இலங்கையில் தனது நிறுவனத்தை ஸ்தாபிக்கும் அவுஸ்ரேலிய நிறுவனம்!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் “யுனைடெட் பெட்ரோலியம்” நிறுவனமே இலங்கையில் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்துக்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கும் இடையே கடந்த 22ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களால் நிறுவப்பட உள்ளன. அவர்கள் இலங்கையில் நடவடிக்கைகளை […]

உலகம்

தேவாலயத்திகுள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு… 15 பேர் உயிரிழந்த சோகம்!

  • February 26, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ நாட்டில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புர்கினா பாஸோ நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. 2022ல் அந்நாட்டில் புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதக் குழுக்கள் உருவாகி அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் அந்நாட்டின் வடக்கு […]

செய்தி வட அமெரிக்கா

வொஷிங்டனில் தூதரகத்துக்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்திய நபர்

  • February 26, 2024
  • 0 Comments

அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தீயணைப்புத் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். வொஷிங்டன் பொலிஸார், இரகசிய சேவை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. குறித்த நபர் தூதரக அதிகாரிகளுக்கு பரீட்சயமான நபர் அல்லவென இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. தூதரகத்துக்கு அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த நபருடையது […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் நந்தினி – கரிகாலன்… சூப்பர் நியுஸ்

  • February 26, 2024
  • 0 Comments

மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா இந்தியன், ஜென்டில்மேன், வாலி போன்ற முக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 12பி, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். பின்னர் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். தற்போது ஜீவாவின் மகள் சனா மரியம் இயக்குனர் ஆக அறிமுகமாக உள்ளார். இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் சிறு வயது விக்ரம் கதாபாத்திரத்தில் […]

செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

  • February 26, 2024
  • 0 Comments

காலி, எல்பிட்டிய – பத்திராஜவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், வீட்டிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் 51 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொழுதுபோக்கு

தங்கச்சிலை ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்கத்தால் கேக்… கொடுத்தது யார் தெரியுமா?

  • February 26, 2024
  • 0 Comments

3 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வரும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார். இதற்காக யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி பதிவிட்டுள்ளார். “என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா […]