உலகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!

  • February 26, 2024
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் (26.02) குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 81 டாலர் 27 காசுகளாக குறைந்துள்ள நிலையில், அமெரிக்க டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 76 டாலர் 14 காசுகளாக பதிவாகியுள்ளது. டாலரின் வலுவினால், மற்ற பரிமாற்றங்களில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு எண்ணெய் விலை உயர்ந்த பொருளாகிறது. இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர் வலுவடைந்து வீழ்ச்சியை […]

ஐரோப்பா

இரவோடு இரவாக உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனில் இரவோடு இரவாக ரஷ்யா 14 ட்ரோன்கள் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையியல் வான் பாதுகாப்பு அமைப்புகள் கார்கிவ் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் ஒன்பது ட்ரோன்கள் மற்றும் மூன்று வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அழித்ததாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளில் இருந்து இரண்டு S-300 ஏவுகணைகளையும், ஒரு வான்-மேற்பரப்பு Kh-31P ஏவுகணையையும் ரஷ்யா ஏவியது என்று விமானப்படைதெரிவித்துள்ளது. வீழ்த்தப்படாத ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் என்ன ஆனது என்பது தொர்பில் தகவல் வெளியாகவில்லை

மத்திய கிழக்கு

பாலஸ்தீனத்தின் பிரதமர் தனது இராஜினாமாவை அறிவித்தார்!

  • February 26, 2024
  • 0 Comments

பாலஸ்தீன மேற்குக் கரையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதமர் மொஹமட் ஷ்டாயேயின் அரசாங்கம் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் முகமது ஷ்டய்யே செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் மமூத் அப்பாஸிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

இலங்கை

அதிக வெப்பமான வானிலை! கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பாரக்கப்படுவதாகவும், இந்த நிலைமை எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: 31,000 உக்ரைன் வீரர்கள் பலி

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பில் இருந்து 31,000 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது ஒரு வருடத்திற்கும் மேலான் முதல் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஆகும் ரஷ்ய இராணுவத் திட்டமிடலுக்கு உதவும் என்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை தன்னால் வெளியிட முடியாது என்று கிய்வில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் ரஷ்யா இராணுவ இழப்புகளை வெளியிடவில்லை, அது இரகசியமாக கருதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

நடிகருடன் ரகசிய உறவில் இருக்கும் விவாகரத்தான நடிகை? வருடத்திற்கு ஒரு ஆளாம்…

  • February 26, 2024
  • 0 Comments

ஜாலியான படத்தில் சேர்ந்து நடித்ததில் இருந்தே தன் பக்கம் அந்த இளம் நடிகரை கவர்ந்து விட்டாராம் அந்த பிரபல நடிகை. அவரது கவனிப்பில் மயங்கிய நடிகர் இதுவரை காதல் என்கிற பெயரில் இன்னொரு நடிகையுடன் உல்லாசமாக வாழ்ந்த ரகசிய வாழ்க்கையை உதறித்தள்ளி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. யாருக்கும் தெரியாமல் நாம வாழலாம் என நடிகை சொன்ன மேட்டர் பிடித்துப் போய் தான் அந்த நடிகையுடன் ரகசிய குடித்தனத்தையே தற்போது அந்த நடிகர் நடத்தி வருகிறார் என்கின்றனர். […]

ஆசியா

பங்களாதேஷில் காட்டு யானைகளை சிறைப்பிடிக்க தடை!

  • February 26, 2024
  • 0 Comments

காட்டு யானைகளை அடக்கவும், அவற்றை சிறைபிடிக்கவும் தடை விதித்து வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காட்டு யானைகள் பங்களாதேஷில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. பங்களாதேஷில் தற்போது 200 யானைகள் உள்ளன, அவற்றில் பாதி அடக்கமான யானைகள். அடக்க யானைகளுக்கான உரிமம் பெற்ற சிலர், அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, பிச்சை எடுப்பது, சர்க்கஸ் அல்லது தெருக்காட்சிகள், விறகு இழுத்தல் போன்ற கடும் இழுபறி வேலைகளுக்கு கால்நடைகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, அந்த உரிமங்களை ரத்து […]

இலங்கை

இலங்கை இன்று இப்படி இருப்பதற்கு யுத்தத்தை ஆரம்பித்தவர்களுக்கும் பொறுப்புள்ளது – நாமல்!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கை இன்று இந்த நிலையில் இருப்பதற்கு 75 வருடகால சாபம் என்று கூறுபவர்கள், 80களில் இடம்பெற்ற கலவரம், 60 ஆயிரம் இளைஞர்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டில் 75 வருட சாபம் என்று பேசுபவர்கள், 88-89 இளைஞர்களை கொன்றவர்கள், 30 வருட கால […]

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து -ஒருவர் பலி, மூவர் படுகாயம்!

  • February 26, 2024
  • 0 Comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சாரதியே உயிரிழந்துள்ளார். ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்யச் […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நம்பிக்கையில்லா பிரேரணைக் கொண்டுவரப்பட்டுள்ளது. சபாநாயகர் பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியதாக குற்றம் சாட்டியே மேற்படி பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி்.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க சந்திம வீரக்கொடி மற்றும் திரு.ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இந்த பிரேரணையை கொண்டுவந்துள்ளனர்.