இலங்கை

இலங்கையில் அதிக இலாபத்தில் இயங்கும் பால்மா நிறுவனங்கள்!

  • March 8, 2024
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக லாபத்தில் பால் மாவை விற்பனை செய்து வருவதாக அரசாங்க நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செனவிரத்ன, “வரி குறைப்பவருக்கு விலை குறையவில்லை. அதை உள்வாங்கி, அரசு என்ற வகையில் எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இதைச் செய்துள்ளார் எனக் கூறியுள்ளார். ஆகவே 2019 ஆம் […]

ஆசியா

சீனாவில் சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • March 8, 2024
  • 0 Comments

சீனாவில் கடந்த ஆண்டில் சைபர் க்ரைம், இது தொடர்பான கைதுகள் பாரிய அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக மோசடி உட்பட கணினி குற்றங்களின் எண்ணிக்கை 2023 இல் 36.2% உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூர்மையான அதிகரிப்பு, எல்லை தாண்டிய கணினி மோசடியை இரட்டிப்பாக்குவதைப் பிரதிபலிக்கிறது, இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள், மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 47 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 17.3 வீதமானோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக இரண்டு புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை!

  • March 8, 2024
  • 0 Comments

இந்த நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக இரண்டு புதிய சட்டமூலங்கள் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் தின நிகழ்வில் இன்று (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மற்றும் பாலின மசோதா ஆகிய இரண்டும் முக்கியமான மசோதாக்கள் எனத் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 […]

ஐரோப்பா

எதிர்த்து போராட உக்ரைனுக்கு 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும்: இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர்

  • March 8, 2024
  • 0 Comments

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் […]

இலங்கை

இலங்கை – கல்பிட்டி பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீன்பிடி கப்பல் மாயம்!

  • March 8, 2024
  • 0 Comments

கல்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அக்கப்பலின் உரிமையாளர் கல்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தக் கப்பலில் ஈச்சங்கடுவ பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்கள் பயணித்துள்ளனர். இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வட அமெரிக்கா

தன் 5வது திருமணத்திற்கு தயாராகும் 92 வயது தொழிலதிபர்…!

  • March 8, 2024
  • 0 Comments

தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (92). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (67) திருமணம் செய்து கொள்வதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது […]

ஆசியா

MH370 விமானம் மாயமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் பூர்த்தி : உறவினர்கள் விடுத்த சிறப்பு கோரிக்கை!

  • March 8, 2024
  • 0 Comments

தொலைந்து போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் காணாமல் போன சீனப் பயணிகளின் குடும்பங்கள் பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் பதில்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். குறித்த விமானத்தில் பயணித்த   பயணிகளின் உறவினர்கள் சிலர் இன்று (08.03) பதில்களுக்கான நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தில் அதிகாரிகளை சந்தித்தனர். மலேசியத் தூதரகத்துக்குச் செல்லவும் திட்டமிட்டனர். இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இருப்பினும் இதன் வடுக்கள் மறையாமல் நிலைத்து நிற்கிறது. MH370 விமானம் […]

இலங்கை

மாத்தறையில் வலம்புரி கடத்திய பிக்கு உட்பட இருவர் கைது

  • March 8, 2024
  • 0 Comments

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபாய் பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் வியாழக்கிழமை (7) இரவு கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் […]

இலங்கை

இங்கிலாந்து செல்ல அனுமதி கோரி முருகன் மனுத்தாக்கல்!

  • March 8, 2024
  • 0 Comments

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2022ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வி. முருகன் என்ற ஸ்ரீ ஹரன், இங்கிலாந்து செல்ல வேண்டிய விமான ஆவணங்களை பெற அவகாசம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அங்கு, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்குச் சென்று, தனது விமான ஆவணங்களைத் தயாரித்து, இங்கிலாந்து செல்ல விசா பெறுவது தொடர்பான நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதி கோரினார். இங்கிலாந்து சென்று அங்கு புகலிடம் கோரி […]

செய்தி

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சம்பவத்தை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள்

  • March 8, 2024
  • 0 Comments

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. முழு அடைப்பு காரணமாக பேருந்து நிலையம் வந்த மக்கள், தாங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு பேருந்துகள் கிடைக்காமல் […]