பொழுதுபோக்கு

மாளவிகா மோகனனுக்கு ஸ்டாம்ப் வெளியிட்ட பூட்டான் தபால் நிலையம்… வைரல் புகைப்படம்!

  • March 8, 2024
  • 0 Comments

பூடான் தபால் நிலையத்தில் நடிகை மாளவிகா மோகனனுக்கு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஸ்டாம்பில் ‘தங்கலான்’ பட கெட்டப்பில் இருக்கிறார் மாளவிகா. இந்தப் புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படும் என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக […]

உலகம்

ஹைதியில் உள்நாட்டுப் போர் மூளும்… எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

  • March 8, 2024
  • 0 Comments

ஹைதி நாட்டில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாதது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜொவனெல் மோய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக முக்கிய குழுத் தலைவரும், கேங் லீடருமான ஜிம்மி பார்ப்பெக்கியூ செரிஸியர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவ்வப்போது ஜிம்மி […]

இலங்கை

உலக சந்தையில் வரலாறு காணாதவாறு தங்கத்தின் விலை அதிகரிப்பு!

  • March 8, 2024
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 24 காரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலை 2,170 அமெரிக்க டாலர்கள் மற்றும் 99 காசுகள் ஆகும். இதேவேளை இலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 186,800.00 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் பவுண் ஒன்றின் விலை 171,250.00 ஆக பதிவாகியுள்ளது. ஆபரண தங்கத்தின் விலை இதில் இருந்து மாறுபடும்!  

ஐரோப்பா

உக்ரைன் அமைதித் திட்டம்: சீனத் தூதருடன் பேச்சுவார்த்தை

ரஷ்யாவுடனான இரண்டு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் கெய்வின் திட்டத்தை வலியுறுத்தி மூத்த உக்ரேனிய அதிகாரிகள், வியாழன் அன்று சீன பிராந்திய தூதுவருடனான சந்திப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது மாஸ்கோவிற்கு வட கொரிய ஆயுதங்கள் வழங்கப்பட்டதற்கான ஆதாரமாக அவர்கள் கூறியதை முன்வைத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ஜனாதிபதி நிர்வாகத்தின் தலைவரான Andriy Yermakகும் அவரது குழுவும் போர்க்களத்தின் நிலைமை மற்றும் கிய்வின் சமாதான முன்மொழிவுகளை யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி லி ஹுய்யிடம் முன்வைத்ததாக தெரிவித்துள்ளார். உக்ரைன் […]

இலங்கை

வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி வழிபாடுகள்!

  • March 8, 2024
  • 0 Comments

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் சிவாலயத்தில் இன்றைய தினம் (08.03) மஹா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வழிபாட்டு செய்ய பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் மக்களும் தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் இணைந்து தடைகளை உடைத்து வழிபாடுள் இடம்பெற்றுள்ளன.    

ஐரோப்பா

துருக்கிக்கு விஜயம் செய்யும் ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை துருக்கிக்கு விஜயம் செய்து துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகனை சந்திப்பார் என்று துருக்கிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர், கருங்கடல் தானிய ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், துருக்கிய பிரசிடென்சி தெரிவித்துள்ளது. உக்ரைன் தனது கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதித்த ஒப்பந்தத்தில் இருந்து ஜூலை மாதம் ரஷ்யா […]

ஐரோப்பா

பட்டர் சிக்கன் உணவை உட்கொண்ட இங்கிலாந்து பிரஜை உயிரிழப்பு!

  • March 8, 2024
  • 0 Comments

இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த பட்டர் சிக்கன் உணவை உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவை உட்கொண்ட பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பரியைச் சேர்ந்த ஜோசப் ஹிக்கின்சன், என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு அனாபிலாக்ஸிஸ் எனப்படும் கொட்டைகள் மற்றும் பாதாம் பருப்புகளால் ஒவ்வாமை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டர் சிக்கனில் குறித்த பொருட்கள் பயன்படுத்தப்பட்ட […]

இலங்கை

ஸ்ரீ பாத மலையில் மூன்று மாதங்களில் மூன்று டன் பிளாஸ்டிக் போத்தலிகள் சேகரிப்பு

ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை தந்த யாத்ரீகர்களால் தூக்கி எறியப்பட்ட மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் இவ்வருடம் ஸ்ரீ பாத பருவம் ஆரம்பித்து மூன்று மாதங்களுக்குள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை அறிவித்துள்ளது. அவ்வழியாக பயணிக்கும் பக்தர்கள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார். இருப்பினும், சில யாத்ரீகர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சுற்றுச்சூழலில் வீசுகிறார்கள். ஸ்ரீ பாத […]

இலங்கை

மிரிஸ்ஸ கடலில் அடித்துச் செல்லப்பட்ட இத்தாலிய பெண்!

  • March 8, 2024
  • 0 Comments

மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் நீராடச் சென்ற பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்குட்பட்ட உயிர்காப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சார்ஜன்ட் 72167 மஞ்சுளா, பொலிஸ் கான்ஸ்டபிள் 20373 லஹிரு மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 19407 லக்ஷன் ஆகியோரினால் வெளிநாட்டுப் பெண் மீட்கப்பட்டுள்ளார். 47 வயதான இத்தாலிய பெண் ஒருவரே விபத்தில் சிக்கியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • March 8, 2024
  • 0 Comments

இலங்கையின்  பல பகுதிகளில் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய மட்டத்தில் தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற […]