கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் – சந்தேக நபர் தொடர்பில் மேலும் பல தகவல் வெளியானது
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விசாரணை முடிந்த பின்னர், உயிரிழந்த 6 பேரின் இறுதிக் கிரியை அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் […]













