இலங்கை

மலையில் ஏறச் சென்ற பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!

  • March 10, 2024
  • 0 Comments

ரம்புக்கனை – எலகல்ல மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே விபத்தில் சிக்கியுள்ளார். இன்று காலை மற்றுமொரு மாணவர் குழுவுடன் எலகல்ல மலையில் ஏறச் சென்ற வேளையிலேயே குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளார். கீழே விழுந்த மாணவனை மீட்க பெரகல இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை […]

உலகம்

நைஜீரியாவில் 280க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தல் – தீவிர தேடுதல் பணியில் ராணுவத்தினர்

  • March 10, 2024
  • 0 Comments

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் குரிகா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து 287 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8-15 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் இருசக்கர வாகனங்களில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவத்தின்போது மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடத்தல்காரர்கள் மாணவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், […]

இலங்கை

உயரும் வெப்பநிலையால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • March 10, 2024
  • 0 Comments

நாட்டில் சமீப காலமாக மிதமிஞ்சி வெப்பநிலை பதிவாகி வருகின்ற நிலையில் தோல் சம்பந்தமான நோய்கள் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கண்நோய் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான […]

உலகம்

போர்ச்சுகல் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு ஆரம்பம்

போர்ச்சுகலின் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்களிப்பு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு போர்ச்சுகலின் பிரதான நிலப்பகுதியிலும் ஒரு மணி நேரம் கழித்து அசோர்ஸ் தீவுக்கூட்டத்திலும் மூடப்படும். நள்ளிரவில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசின் 230 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட 11 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்றவர் கொடூரமாக குத்திக்கொலை… கோவையில் அதிர்ச்சி சம்பவம்!!

  • March 10, 2024
  • 0 Comments

கோவையில் சாலையில் நடந்து சென்றவரை இருசக்கர வாகனத்தில் வந்தவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (35). கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் கோவை துடியலூர் அடுத்த காசி நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலைகள் செய்து வருகிறார். இன்று அதிகாலை 6 மணி அளவில் தேநீர் அருந்துவதற்காக ஜெய்கணேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் […]

பொழுதுபோக்கு

முழுக்க முழுக்க கடத்தல் பணத்தில் எடுக்கப்பட்ட படம் “மங்கை”.. வெளிவந்த உண்மை..

  • March 10, 2024
  • 0 Comments

கயல் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான நடிகை ஆனந்தி கதாநாயகியாக நடித்த மங்கை திரைப்படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் கடத்தல் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், டிரை ப்ரூட்ஸ் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்துவைத்து போதைப் பொருள் தயாரிக்கும் முக்கிய வேதிப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து […]

இலங்கை

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் பிரேத பரிசோதனை நிறைவு!

  • March 10, 2024
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் நாட்டை வந்தடைந்த பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (09) பர்ஹாவன் பிரதேசவாசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhaven என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்காவின் வீட்டிற்கு […]

இலங்கை

இலங்கை: 17 வயது யுவதி மர்மமான முறையில் கொலை: பொலிஸார் தீவிர விசாரணை

எல்பிட்டி – தலாவ பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து நேற்று (09) 17 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்ட யுவதி தமது சகோதரியின் கணவருடன் வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த யுவதி மீண்டும் தமது வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு எதிராக யுவதியும் அவரது தாயும் கடந்த 6 ஆம் திகதி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக சென்று கொண்டிருந்த […]

இலங்கை

ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் : பதற்றத்தில் பயணிகள்!

  • March 10, 2024
  • 0 Comments

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஹூஸ்டன் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விலகியதால் பதற்றம் நீட்டித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த விமானத்தில் 160 பயணிகளுடன், 06 பணியாளர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரைக்கு அருகே அதன் ஒரு இறக்கையுடன் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன. 2477 என்ற விமானம், டென்னசி, மெம்பிஸ் நகரிலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஹூஸ்டனின் புஷ் […]

உலகம்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆபாச நடிகை… மூன்று மாதங்களில் நான்காவது மரணம்!!

  • March 10, 2024
  • 0 Comments

ஆபாச பட உலகின் பிரபல நட்சத்திரமான சோபியா லியோன் என்பவர் இறந்திருப்பது அந்த உலகில் சஞ்சரிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயதுவந்தோர் திரைப்படங்களுக்கான பிரபல நட்சத்திரத்திரங்களில் ஒருவர் சோபியா லியோன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இறந்த நிலையில் அவரது குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் சோபியா லியோன் நடப்பு அமெரிக்க ஆபாச நட்சத்திரங்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவர். ஆபாச திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் அதில் நடிப்பது என்பது சினிமா, தொலைக்காட்சி போன்றே அங்கீகரிக்கப்பட்ட துறையாக […]