மத்திய கிழக்கு

சவூதி அரேபியாவில் பெண் ஊடகவியலாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ரோபோ

சவூதி அரேபியாவில் பெண் நிருபரிடம் அத்துமீறிய ஆண் ரோபோவால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் முதல் ஆண் ரோபோ முஹம்மதுவினால் இந்த சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ரோபோ நேரலை நிகழ்வில் ஒரு பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.

சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ அருகில் நின்றுகொண்டு பெண் நிருபவர் செய்தியை வழக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் நிருபரின் பின்னால் நின்று கொண்டிருந்த ரோபோ தகாத முறையில் நடந்தது.

ரோபோ செயலை உணர்ந்த அந்த ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார். அதன் பின்னரே அந்த ரோபோ அமைதியாகிறது.

நேரலையில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த செய்தி நிறுவனத்தால் இதைக் எதுவும் செய்யும் முடியவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,இணையத்தில் பலரும் அந்த ரோபோவின் செயலை கடுமையாகச் சாடியுள்ளனர்.

இதைக் கோட் செய்தவர் மிக மிகத் தவறான முறையில் கோடிங் எழுதியுள்ளதாகச் சிலர் குற்றம்சாடி வருகிறார்கள்.

சவுதி அரேபியா ஏஐ துறையில் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதைக் காட்ட அந்நாட்டு அரசே QSS சிஸ்டம்ஸ் மூலம் இந்த ரோபோவை உருவாக்கி இருந்தது. ஆனால், இந்த ரோபோ பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டமையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.