இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது!

  • March 10, 2024
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்றிரவு பெதுருதுடுவ மற்றும் காங்கசந்துறை எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. மூன்று இந்திய இழுவை படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

பொழுதுபோக்கு

அண்ணனுடன் மனைவியை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கணவர்.. கதறும் சீரியல் நடிகை

  • March 10, 2024
  • 0 Comments

பிரபல சீரியலில் நடிகை தீபா, தனது கணவரின் அண்ணன் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சின்னத்திரை நடிகையான தீபா, அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி, ஆண்டாள் அழகர், பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, விக்ரம் வேதா, மோதலும் காதலும் சீரியல் தயாரிப்பு […]

தமிழ்நாடு

கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 10 விருதுகளை பெற்ற 2 குழந்தை !!

  • March 10, 2024
  • 0 Comments

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (25). இந்த தம்பதிகளின் குழந்தை சாய் சித்தார்த் (2). பிறந்த நாள் முதல் மிகவும் சுறு, சுறுப்பாக காணப்படும் சாய் சித்தார்த், இந்த வயதிலேயே தேசிய கொடிகளை வைத்து அதற்குரிய நாடுகளின் பெயரை சரியாக தெரிவிக்கின்றார். இந்திய வரைபடத்தை வைத்து அனைத்து மாநிலங்களையும் சரியாக அடையாளம் காட்டுகின்றார். உலக வரைபடத்தில் கண்டங்கள் பெயரை சரியாக காண்பித்து கின்னஸ் […]

இலங்கை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தபால் பரிவர்த்தனை ஊழியர்கள்!

  • March 10, 2024
  • 0 Comments

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். சென்ட்ரல் போஸ்ட் எக்ஸ்சேஞ்ச் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 8 மாடி கட்டிடத்தில் உடைந்த மின்தூக்கியை சீர் செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். சென்ட்ரல் போஸ்ட் எக்ஸ்சேஞ்சில் பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கர்ப்பிணித் […]

ஆசியா

ஈரானிய தலைவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகள் நீக்கம்..

  • March 10, 2024
  • 0 Comments

ஈரான் நாட்டில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடக தளங்கள் மக்களிடையே அதிக பிரபலம் வாய்ந்தது. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஈரான் மக்கள் வி.பி.என். வழியே அவற்றை இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். அந்நாட்டின் தலைவராக கடந்த 1989-ம் ஆண்டு முதல் அயோத்துல்லா காமினி (84) இருந்து வருகிறார். அரசின் பல்வேறு மிக பெரிய கொள்கைகளை இறுதி முடிவு செய்யும் […]

இலங்கை

இலங்கை – அளுத்கமவில் சூதாட்ட அரங்கம் ஒன்று சுற்றிவளைப்பு!

  • March 10, 2024
  • 0 Comments

அளுத்கமவில் சொகுசு வீடொன்றில் நடத்தப்பட்ட சூதாட்ட அரங்கை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 08 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஸ்கொட, பலபிட்டிய, அளுத்கம, களுத்துறை, பேருவளை, பெந்தர, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்த பெண்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அளுத்கம, சதிபொல பிரதேசத்திற்கு அருகில் உள்ள ஆடம்பரமான இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் இந்த சூதாட்ட விடுதி நடத்தப்பட்டது. ஆடம்பரமான இரண்டு மாடி வீட்டின் கீழ் தளத்தில் அழகு […]

இலங்கை

கமல்ஹாசன் தி.மு.க பக்கம் சாய்ந்தமைக்கான காரணம் என்ன? : அண்ணாமலை விளக்கம்!

  • March 10, 2024
  • 0 Comments

நிர்பந்தம் காரணமாக திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மூத்த நடிகர் அரசியல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். தற்போது கமலஹாசன் தி.மு.க பக்கம் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை, கொள்கை அரசியல் […]

உலகம்

பாலஸ்தீனத்தில் விரிவடைந்துள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள்!

  • March 10, 2024
  • 0 Comments

மேற்குக் கரையை மையமாகக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் ஒரு வருடத்திற்குள் வரலாறு காணாத வகையில் விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2023 அக்டோபர் வரையிலான ஒரு வருடத்தில் மேற்குக் கரையில் 24,300 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய […]

ஐரோப்பா

இத்தாலியில் கலைப்பொருட்கள் கண்காட்சியில் 49 தங்க சிலைகள் கொள்ளை..!

  • March 10, 2024
  • 0 Comments

இத்தாலி நாட்டில் லேக் கர்டா பகுதியருகே கலை பொருட்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட இந்த கண்காட்சியில் தங்கத்தில் செய்யப்பட்ட எண்ணற்ற சிலைகள், மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் பிற தங்க நகைகள் உள்ளிட்டவை காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளி கிழமையுடன் இந்த கண்காட்சியை நிறைவு செய்வது என திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சூழலில், கண்காட்சியில் இருந்து 49 தங்க சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து […]

இலங்கை

களுத்துரை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • March 10, 2024
  • 0 Comments

களுத்துறை கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (09) இரவு களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுகங்கை முகத்துவாரத்தை அண்மித்த கடற்கரையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த பெண்ணின் சடலம் இரண்டு நாட்களாக நீரில் கிடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக […]