இலங்கை

வவுனியாவில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

வவுனியாவில் ரி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் பாேதைப் பாெருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (22.3) கைது செய்யப்பட்டுள்ளதாக  செட்டிகுளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்காெள்ளப்பட்ட விசேட சாேதனையி்ன் பாேது செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியில் ரி56 துப்பாக்கி ரவைகள் 13 உம் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பாெலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்