ஆசியா செய்தி

IMF இடம் இருந்து மேலும் ஒரு கடனை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

  • March 26, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மற்றொரு கடன் திட்டம் தேவை என்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நாட்டில் வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் விழாவில் பிரதமர் ஷெரீப் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஸ்திரத்தன்மையின் நோக்கத்திற்காக அரசாங்கம் ஒரு புதிய IMF ஒப்பந்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று பிரதமர் கூறினார். இருப்பினும், IMF திட்டத்துடன், வளர்ச்சியை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பணவீக்க பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் அரசாங்கம் […]

ஐரோப்பா

மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன்: ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு

மாஸ்கோ தாக்குதலின் பின்னால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இருந்ததாக ரஷ்யாவின் உளவுத் தலைவர் தெரிவித்துள்ளார் ஆதாரம் இல்லாமல் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தாக அரசு செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது இஸ்லாமிக் ஸ்டேட்-கே, இஸ்லாமிய அரசின் ஆப்கானிஸ்தான் துணை அமைப்பு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டுவதாக மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்த்தக்கது.

விளையாட்டு

IPL Match 07 – குஜராத் அணிக்கு 207 ஓட்டங்கள் இலக்கு

  • March 26, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடரின் இன்றைய 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ருதுராஜ் 1 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தமிழக வீரர் சாய் கிஷோர் மிஸ் செய்தார். முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுத்த சிஎஸ்கே அதன்பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 பந்துகளில் […]

உலகம்

ஐ.நா வாக்கெடுப்பு : அமெரிக்கா இஸ்ரேல் இடையே தீவிரமடையும் முறுகல்

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவுகள் இடையே முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்காமை குறித்து இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையிலுள்ள ஏனைய 14 நாடுகளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. கடந்த ஒக்டோபரில் காஸா யுத்தம் ஆரம்பமான பின்னர் காஸாவில் போர் நிறுத்தம் […]

பொழுதுபோக்கு

மலையாள சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்கவே இல்ல… அப்படி என்ன ஸ்பெஷல்?

  • March 26, 2024
  • 0 Comments

பிலெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால், சோபா மேனன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து, வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி இப்படத்தை இயக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு படபிடிப்பை தொடங்கிய ஆடு ஜீவிதம் படக்குழுவினர், 2023 ஆம் ஆண்டில் படபிடிப்பு பணிகளை முடித்தனர். மலையாள சினிமாவில் ஆடுஜீவிதம் […]

பொழுதுபோக்கு

ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு காரணம் இதுதான்: மனம் திறந்த நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா. சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்தில் முதன்முதலில் நாயகியாக நடிக்க அதன்பிறகு சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் டாப் நாயகியாக வலம் வந்தார். 40 வயதை கடந்த போதும் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா ஹிந்தி படத்தில் நடிக்காதது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், 2010ம் ஆண்டு […]

இலங்கை

பொரளை- 14 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பலி!

  • March 26, 2024
  • 0 Comments

பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத் பிரேமரத்ன, ஹேரத் முதியன்சேலா என்ற 24 வயதுடைய நபராவார். 18 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 14வது மாடியில் கொத்தனார் ஒருவருக்கு உதவிய போது உயிரிழந்த நபர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  

வட அமெரிக்கா

அமெரிக்கா-புளோரிடாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

  • March 26, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதை சட்டம் தடை செய்கிறது. தற்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள கணக்குகளை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என புளோரிடா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழப்பு !

  • March 26, 2024
  • 0 Comments

யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியில் அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிகிச்சை நிலையத்திற்கு சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு முழங்கால் வலிகளை போக்குவதாக முழங்கால்களில் ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின்னர் கடுமையான வலிகள் ஏற்பட்டமையால் , யாழ்.போதனா வைத்தியசாலையில் […]

விளையாட்டு

2024 மகளிர் ஆசியக் கோப்பை இலங்கையில்…!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தம்புள்ளையில் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இந்தப் போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்கும்.