இலங்கை

இலங்கை முழுவதும் ஏறக்குறைய 30000 சிறுவர்கள் யாசகம் கேட்பதாக தகவல்!

  • March 27, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் 20,000 முதல் 30,000 வரையிலான தெருவோரச் சிறுவர்கள் யாசகம் கேட்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொவிட் தொற்றுநோய் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை வளர்ச்சியைக் காட்டுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் தரவுக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர்  வசந்த அத்துகோரள தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் செய்த ஆய்வுகளில், 2019 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 15,000 பேர் இந்த குழுவில் இருக்கலாம் என்று […]

இலங்கை

இலங்கையில் நிலவும் அமைதியற்ற சூழல் : சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து!

  • March 27, 2024
  • 0 Comments

நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் சுற்றுலா வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பாதாள உலக செயற்பாடுகள் போன்ற பயங்கரமான சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பெந்தர, அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். […]

இந்தியா

போதேயில் எல்லை மீறிய இளம்பெண்… ஆட்டோ ஓட்டுநரை அடித்து உதைத்ததால் பரபரப்பு!

  • March 27, 2024
  • 0 Comments

நள்ளிரவில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த இளம்பெண், ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குடிபோதையில், அரை குறை ஆடை அணிந்த பெண்கள் சாலையில் செல்வோரிடம் தகராறு செய்வதும், கார், பைக்குகளை வேகமாக ஓட்டி வந்து பொதுமக்கள் மீது மோதுவதும் வாடிக்கையாகி விட்டது. அப்படி ஒரு சம்பவம் நேற்று நள்ளிரவும் நடைபெற்றது. பெங்களூருவில் சஞ்சய் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் […]

பொழுதுபோக்கு

லோகேஷ் கனகராஜின் ரொமான்ஸ் பற்றி ஆண்ட்ரியா இப்படி சொல்லிட்டாங்களே…

  • March 27, 2024
  • 0 Comments

ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் செய்து நடித்ததை பார்த்து மாஸ்டர் படத்தின் நடிகை ஆண்ட்ரியா அடித்த கமெண்ட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜின் படங்கள் என்றாலே காதல் காட்சிகள் பெரிதும் இருக்காது. மேலும், காதலை பிரித்து விடுவார். காதலர்களில் ஒருவரை போட்டு தள்ளி விடுவார். விக்ரம் படத்தில் உச்சகட்டமாக பகத் ஃபாசிலின் காதலியாக நடித்த காயத்ரியின் தலையை விஜய்சேதுபதி அறுத்து போட்டு விடும் காட்சி பதை பதைக்க வைத்திருக்கும். இவருக்கு மனநலம் […]

ஆசியா

திருமண சமத்துவ மசோதாவிற்கு தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒப்புதல்!

  • March 27, 2024
  • 0 Comments

தாய்லாந்தின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் உள்ள சட்டமியற்றுபவர்கள் இன்று (27.03) திருமணச் சமத்துவ மசோதாவுக்கு பெரும்பான்மையாக ஒப்புதல் அளித்துள்ளனர், பிரதிநிதிகள் சபையின் 415 உறுப்பினர்களில் 400 பேரின் ஒப்புதலுடன் மசோதா அதன் இறுதி வாசிப்பை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிராக 10 பேர் வாக்களித்துள்ளனர். “ஆண்கள் மற்றும் பெண்கள்” மற்றும் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளை “தனிநபர்கள்” மற்றும் “திருமண பங்காளிகள்” என்று மாற்றுவதற்கு இந்த மசோதா ஒப்புதல் அளிக்கிறது. இது LGBTQ+ ஜோடிகளுக்கு முழு சட்ட, நிதி […]

இலங்கை

இலங்கை – நீர்கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் சென்டர் : இரு யுவதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • March 27, 2024
  • 0 Comments

நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த இரண்டு பெண்களுக்கு எச்ஐவி எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இதனை தெரிவித்துள்ளார். இந்தச் சோதனையின் போது 53 மசாஜ் மையங்கள் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]

பொழுதுபோக்கு

சித்தார்த் – அதிதி திடீர் திருமணம்? எங்க எப்போனு உங்களுக்கு தெரியுமா?

  • March 27, 2024
  • 0 Comments

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில், ரகசியமாக இன்று திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் இன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வரும் நிலையில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் படத்தில் அதிதி ராவ் ஹைதரியுடன் […]

இலங்கை

குருநாகல் பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேரூந்து..

  • March 27, 2024
  • 0 Comments

குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதனையடுத்து, குருநாகல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

வட அமெரிக்கா

கனடா – சஸ்கற்றுவானில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்!!

  • March 27, 2024
  • 0 Comments

கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் வயது வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா

பிஜி தீவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!

  • March 27, 2024
  • 0 Comments

பிஜி தீவில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தென் பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே பிஜி தீவுகள் உள்ளது. நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கும் நாடுகளின் பட்டியலில பிஜி தீவுகள் இடம் பெற்றுள்ளது. இங்கு அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் உடமைகளையும், உயிர்களையும் இழந்து வருகின்றனர். இந்த நிலையில், பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் […]