இலங்கை

இலங்கையில் விசா வழங்கும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • March 27, 2024
  • 0 Comments

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முறைமையிலிருந்து விலகி தனியார் ஏஜென்சிகள் மூலம்  விசா வழங்கும் திட்டம் உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை விசா வழங்கப்பட்ட முறையால், மொத்த வருமானமும் குடிவரவுத் துறைக்கு நேரடியாகச் சென்றது. ஆனால் இந்த வேலையை தற்போது தனியாருக்கு வழங்குவதால்  அந்த வருமானத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிராக களத்தில் இறங்கும் போலந்து

நேட்டோ தனது எல்லைகளுக்கு மிக அருகில் செல்லும் ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக போலந்தின் துணை வெளியுறவு மந்திரி Andrzej Szejna தெரிவித்துள்ளார். “ரஷ்யா அந்த ஏவுகணை போலந்துக்கு மேலும் நகர்ந்தால், அது சுட்டு வீழ்த்தப்படும் என்று தெரியும். ஒரு எதிர் தாக்குதல் இருக்கும்.” என்று அவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கு உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை மூலம் ரஷ்யா போலந்தின் வான்வெளியை மீறியதாக போலந்தின் ஆயுதப்படைகள் தெரிவித்தன […]

இந்தியா

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து ஊர்வலம்: இந்தூரில் 4 பெண்கள் கைது!

  • March 27, 2024
  • 0 Comments

இந்தூர் கிராமத்தில் இளம்பெண்ணை அடித்து உதைத்து ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக நடத்திச் சென்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டம் கவுதம்புராவில் உள்ள சச்சோடா கிராமத்தில் 30வயது பெண்ணை, ஹோலி பண்டிகையையொட்டி அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடத்திச் சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை […]

ஐரோப்பா

ஜேர்மனியில் இடம்பெற்ற கோர விபத்து : ஐவர் பலி!

  • March 27, 2024
  • 0 Comments

பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்திற்குச் சென்ற பேருந்து கிழக்கு ஜெர்மனியில் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். A9 நெடுஞ்சாலையில் Leipzig அருகே காலை 9:45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சாலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானத்தில் 53 பயணிகளும் இரண்டு ஓட்டுனர்களும் இருந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் துப்பாக்கிச் சூடு : 8பேர் பலி

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏழு லெபனானியர்களும் ஒரு இஸ்ரேலியரும் கொல்லப்பட்டனர். ஸ்ரேலிய விமானத் தாக்குதல் இஸ்லாமிய அவசரநிலை மற்றும் நிவாரணப் படையின் அலுவலகத்தைத் தாக்கியது என்று லெபனான் ஆம்புலன்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது . தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு தன்னார்வலர்களின் பெயர்களை மருத்துவ உதவியாளர்கள் சங்கம் பட்டியலிட்டது. குறித்த தாக்குதல் “மனிதாபிமான பணியின் அப்பட்டமான மீறல்” என்று அது தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

ஜேர்மனில் இரு தசாப்தங்களாக தலைமறைவாகி இருந்த இருவர் கைது!

  • March 27, 2024
  • 0 Comments

ஜேர்மன் புலனாய்வாளர்கள் இரண்டு தசாப்தங்களாக தலைமறைவாகி இருந்த இருவரை இன்று (27.03) கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த இருவரும் செம்படைப்பிரிவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாதம் இடதுசாரி செம்படை பிரிவில் பணியாற்றியவர் என  சந்தேகிக்கப்படும் 65 வயதான Daniela Klette என்பவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. செம்படை பிரிவு கலைக்கப்பட்ட பின்னர், 1999 மற்றும் 2016 க்கு இடையில் தொடர்ச்சியான கொள்ளைகளில் பங்கேற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியட்நாம் போருக்கு எதிரான […]

இந்தியா

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரு சீனர்கள் கைது!

  • March 27, 2024
  • 0 Comments

நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியா- நேபாளம் எல்லையில் உள்ள சித்தார்த் நகரின் கக்ராவா போஸ்டில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீன நாட்டை சேர்ந்த இருவர், சஷாஸ்த்ர சீமா பால் (எஸ்எஸ்பி) படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சீனாவின் சிச்சுவானைச் சேர்ந்த ஜோ புலின் (27), சோங்கிங்கை பூர்விகமாகக் கொண்ட யுவான் யுஹான் (22) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் உத்தரப் பிரதேசத்துக்கு செல்ல முற்பட்டபோது பாதுகாப்பு படையினரிடம் […]

இலங்கை

நான்கு பாடசாலை மாணவர்கள் மா ஓயா ஆற்றில் மூழ்கி பலி

அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் மா ஓயா ஆற்றில் மூழ்கி நான்கு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீரில் மூழ்கிய மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். இவர்களில் ஒரு சிறுவன் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஏனைய நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்கஹவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தரம் […]

இலங்கை

நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி…

  • March 27, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, அங்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

உக்ரைனில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனத்தில் மாற்றம்!

  • March 27, 2024
  • 0 Comments

உக்ரைனின் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரை மாற்றியமைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக பணியாற்றிய Oleksii Danilov-ஐ Zelenskyy பதவி நீக்கம் செய்துள்ளதுடன், நேற்றைய உரையில் அவருடைய சேவையை பாராட்டி நன்றி கூறினார். உக்ரைனின் வெளிநாட்டு புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஒலெக்சாண்டர் லிட்வினென்கோவை நியமித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் என்பது ஒரு கொள்கை ஒருங்கிணைப்பு அமைப்பாகும், இது உயர் அதிகாரிகளை உள்ளடக்கியது மற்றும் ஜெலென்ஸ்கியின் தலைமையில் உள்ளது. […]