இலங்கை

ரயிலில் மோதி பலியான பேராதனை பல்கலை மாணவன்..!

  • April 2, 2024
  • 0 Comments

பேராதனை பல்கலைக்கழக முதுகலைப் பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (01) மாலை பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபாலமவிற்கு அருகில் ரயில் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தல்பிட்டிய வடக்கு, வாத்துவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ஐரோப்பா

பின்லாந்தில் உள்ள பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு : பலர் படுகாயம்!

  • April 2, 2024
  • 0 Comments

பின்லாந்தின் வான்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று (02.04) காலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக விடாசே ஊடகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்க அமைச்சரவை அனுமதி!

  • April 2, 2024
  • 0 Comments

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் 04 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது, அதில் சுமார் 1.2 மில்லியன் வயது வந்த பெண் மாணவர்கள் உள்ளனர். மிகவும் கடினமான பாடசாலைகள்,  தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டுப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 800,000 மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்த […]

இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

  • April 2, 2024
  • 0 Comments

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 750 6-15 இருக்கைகள் கொண்ட வேன்கள் (மின்சார மற்றும் ஹைபிரிட் உட்பட) மற்றும் 250 16-30 இருக்கைகள் கொண்ட மினிபஸ்கள் மற்றும் 30-45 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் […]

மத்திய கிழக்கு

சிரியா- ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்… தளபதி உட்பட 11 பேர் உயிரிழப்பு!

  • April 2, 2024
  • 0 Comments

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் தூதரக கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் அதிலிருந்த முக்கிய தளபதி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி குழுவும் இஸ்ரேல் நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் […]

ஆசியா

ஜப்பானில் அடுத்தடுத்து 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

  • April 2, 2024
  • 0 Comments

ஜப்பானின் வடக்குப் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற நிலநடுக்க இயற்கை பேரிடர்களால் ஏராளமான பொதுமக்களின் உயிர்கள் மட்டுமின்றி உடமைகளும் சேதமாகி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஜப்பானில் 2 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள இவாட் […]

இலங்கை

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!

  • April 2, 2024
  • 0 Comments

கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. தெஹிவளை மேம்பாலத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தின் போது சாரதி காரிலிருந்து வெளியே குதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

செய்தி

University College Londonனின் பெயர் மாற்றம் – கசிந்த மின்னஞ்சல்

  • April 2, 2024
  • 0 Comments

லண்டனில் உள்ள பிரபல பல்கரைக்கழகம் ஒன்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. University College லண்டன், King’s College லண்டனில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதற்காக அதன் பெயரை “The London University” என பெயரை மாற்றிக் கொண்டுள்ளது. University College லண்டன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், பல்கலைக்கழகம் King’s College லண்டனில் தன்னைத் தூர விலக்கிக் கொள்வதற்காக ஒரு பெரிய மறுபெயரைப் பெறும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கசிந்த மின்னஞ்சலின்படி, இந்த மறுபெயரானது […]

பொழுதுபோக்கு

அந்த பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை – உணர்ச்சிவசப்பட்ட யோகி பாபு

  • April 2, 2024
  • 0 Comments

கேரளாவைச் சேர்ந்த நஜீப் வேலைக்காக அரபு நாடுக்குச் சென்று, அங்குள்ள முதலாளியால் ஏமாற்றப்பட்டு ஆடு மேய்க்கப் பணிக்கப்படுகிறார். பாலைவனத்தில் 700 ஆடுகளுடன் தன்னந்தனியாக வசிக்க நேர்கிறது. ஒருகட்டத்தில் தன்னையும் ஒரு ஆடாக கருதிக் கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிலைமை மோசமாகிறது. இந்த கடின காலத்தைத் தாண்டி எப்படி நஜீப் உயிர் பிழைத்தார் என்ற உண்மைச் சம்பவத்தை பென்யாமின் ஆடு ஜீவிதம் என்ற நாவலாக எழுத, அதனடிப்படையில் பிளெஸ்ஸி ஆடு ஜீவிதம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 14 வருட […]

செய்தி

இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் ஈழத்தமிழ் யுவதி

  • April 2, 2024
  • 0 Comments

19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் 17 வயதான ஈழத்தமிழ் யுவதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருகின்றார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் மகளான அமுருதா சுரேன்குமார் தேசிய அணியில் விளையாடி வருகிறார். இலங்கைக்கு எதிராக 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக  அறிமுகமான முதல் தொழில்முறை பெண் கிரிக்கெட் வீராங்கனையான அமுருதா அறிமுகமானார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இங்கிலாந்தில் பிறந்தவர் அமுருதா சுரேன்குமார். மிதவேகமான பந்துவீச்சாளராக செயற்படும் அமுருதா, துடுப்பாட்டத்தில் அசத்தி வருகிறார். இங்கிலாந்தின் […]