மட்டக்களப்பு – தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ; சிரமங்களுக்கு ஆளான நோயாளர்கள்
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இன்று காலை இலங்கையில் உள்ள பத்து வைத்தியசாலைகளில் 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர். இதன்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.வைத்தியசாலையில் கடமையில் உள்ள பல்வேறு பிரிவினரும் நான்கு மணி நேரம் கடமைக்கு செல்லாமல் […]













