ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வீடுகள் தொடர்பில் மோசடி விளம்பரம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • April 2, 2024
  • 0 Comments

சிட்னியில் வாராந்திர வாடகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகள் தொடர்பில் நுகர்வோரின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. இணையத்தில் மிகவும் உயர்தரம், முழு வசதிகள் கொண்ட வாடகை வீடுகள் என குறிப்பிடப்பட்டாலும் அத்தியாவசிய வசதிகளுடன் வீடுகள் அமைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 750 டொலர் வாடகை அடிப்படையில் வழங்கப்படும் இந்த வீடுகள் முழுமையாக புனரமைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆன்லைன் விளம்பரத்தில், மூன்று படுக்கையறைகள், ஒரு சாப்பாட்டு அறை, ஒரு சமையலறை மற்றும் ஒரு தனி குளியலறை என்று […]

வாழ்வியல்

கடுமையாகும் வெயில்: சோர்வு, மயக்கம் ஏற்படாமல் – மக்களுக்கு எச்சரிக்கை

  • April 2, 2024
  • 0 Comments

வெப்ப நிலை அதிகரிக்கும்போது, நமது உடல் வரட்சியடைந்து, நீரிழப்பு ஏற்படும். இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் நாம் தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதுதான். இந்நிலையில் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடித்தால், நமக்கு நீரழப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம். வெப்ப நிலை அதிகரிக்கும்போது, அதிக வியர்வை வெளியாகும். நீண்ட நேரம் சூரிய கதிர்கள் பட்டால், உடல் பயிற்சி நீண்ட நேரம் செய்தால் நமக்கு நீரழப்பு ஏற்படலாம். இந்நிலையில் நீரழப்பின் அறிகுறியானது சோர்வு, மயக்கம், வரண்ட வாய், சிறுநீர் […]

ஐரோப்பா

ஷெங்கன் பிரதேசத்திற்குள் இணைந்தன 2 நாடுகள் – பயண முறை குறித்து வெளியான தகவல்

  • April 2, 2024
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பில் ஒரு புதிய படியைக் குறிக்கும் வகையில், இரண்டு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவின் அடையாளச் சரிபார்ப்பு இல்லாத பயண மண்டலத்தில் ஓரளவு இணைந்துள்ளன. ரூமேனியா மற்றும் பல்கோியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து ஒரு தசாபத்திற்கு மேலாகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரூமேனியாவும், பல்கோியாவும் விசா இல்லாத ஷெங்கன் பிரதேசத்திற்குள் இணைந்தன. கடல் அல்லது விமானம் மூலம் பயணிக்கும் போது விசா மற்றும் கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டின் மூலம் பயணிக்க வேண்டிய அவசியமின்றி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் விமானப் பராமரிப்பு ஊழியர்கள் இல்லாமல் திணறும் நிறுவனங்கள்

  • April 2, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் விமானப் பராமரிப்பு ஊழியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மூத்தோர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதாலும் வேறு சிலர் கொரோனா தொற்று காலக்கட்டத்தின்போது மற்ற வேலைகளில் சேர்ந்ததாலும் ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் இன்னும் 24,000 விமானப் பராமரிப்பு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். 2028ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 40,000த்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2034ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் விமானங்களின் எண்ணிக்கை 36,400க்கும் மேல் கூடவிருக்கிறது. அதனால் பழுதுபார்ப்பு, சீரமைப்பு பணிகளுக்கான செலவும் சுமார் 20 சதவீதம் […]

உலகம் செய்தி

காற்று மாசுபாடு காரணமாக உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள்

  • April 2, 2024
  • 0 Comments

காற்று மாசுபாடு காரணமாக உலகில் மிகவும் மாசுபட்ட நாடுகள் குறித்து புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காற்றின் தர அளவுகோல்களின்படி இந்த குறிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள சுமார் 7800 நகரங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் மோசமான காற்றின் தரம் உள்ள பகுதிகளில் வாழ்வது தனிநபர்களின் ஆயுட்காலத்தையும் பாதிக்கிறது என்று அறிக்கைகள் காட்டுகின்றன. அதன்படி, மோசமான காற்று மாசுபாடு உள்ள நாடுகளில் பங்களாதேஷ் முதலிடத்தில் உள்ளது. அதற்கமைய, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் […]

செய்தி

சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வந்துள்ள புதிய வீதி பாதுகாப்பு விதிகள்

  • April 2, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் விபத்துகளை குறைக்கும் வகையில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான புதிய விதிமுறைகள் திங்கள்கிழமை அமலுக்கு வந்துள்ளன. புதிய கார்களில் ஓட்டுநர் உதவி அமைப்புகள் மற்றும் விபத்து தரவு பதிவு செய்யும் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், அதே நேரத்தில் புதிய வேகமான மின்சார சைக்கிள்களில் வேகமானி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். டிசம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளின் மூலம், புதிய வாகனங்கள் சமீபத்திய பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் விரும்புகிறது. ஏப்ரல் மாதம் முதலாம் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கையடக்க தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறதா என உறுதி செய்வது எப்படி?

  • April 2, 2024
  • 0 Comments

உங்களின் ஃபோன் ஹேக் அல்லது ஒட்டுக் கேட்கப்படவில்லை என்பதை, உறுதி செய்வதற்கான வழிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. செல்ஃபோன் பயன்பாடு: ஸ்மார்ட் ஃபோன்கள் தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மனிதனின் ஆறாம் விரலாகவும் உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்கி, நமது தனிப்பட்ட விவரங்கள் வரை அனைத்தையும் அறிந்த ஒரு தகவல் களஞ்சியமாகவே ஸ்மார்ட்ஃபோன் உருவெடுத்துள்ளது. எந்த ஒரு தகவலையும் நொடி நேரத்தில் நம்மால் அறிய முடியும். அதேநேரம், இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் நமக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்புள்ளது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பொதுபோக்குவரத்து பயணிகளுக்கு கடுமையாகும் சட்டம்

  • April 2, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பொதுபோக்குவரத்து பயணிகளுக்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயண சீட்டுக்கள் இன்றி பயணம் மேற்கொள்வதாக கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் பொது போக்குவரத்தில் ஈடுப்படுகின்றவர்கள் பெறுமதியான பயண அட்டைகள் இன்றி பயணம் மேற்கொள்பவர்கள் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது. இது வரை நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி எவர் ஒருவர் ஒரு வருடத்தில் 3 தடவைகள் இவ்வாறு பெறுமதியான பயண அட்டை இன்றி பொது போக்குவரத்தில் […]

ஐரோப்பா

பிரான்ஸ் பாடசாலை ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவன்

  • April 2, 2024
  • 0 Comments

பிரான்ஸில் உள்ள பாடசாலை ஒன்று க்கு ஆயுதத்துடன் வருகை தந்த 15 வயதுடைய மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். Collège Albert Camus பாடசாலை வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன், 12 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றை தனது பைக்குள் வைத்து பாடசாலைக்கு எடுத்து வந்திருந்தார். இந்த நிலையில், அது சக மாணவர்களால் அடையாளம் காணப்பட்டு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த கத்தியும் பறிமுதல் […]

ஆசியா

ஜப்பானில் அச்சுறுத்தும் தொண்டை வலி – உயிரை பறிக்கும் அபாயம்

  • April 2, 2024
  • 0 Comments

ஜப்பானில் அதிகமானோர் ஒருவகைத் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. Streptococcal toxic shock syndrome (STSS) என்று அந்தத் தொண்டை வலி அழைக்கப்படுகிறது. இவ்வாண்டில் ஜப்பான் முழுதும் 600க்கும் அதிகமானோர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முழுமைக்கும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 950ஆக இருந்தது. அந்தத் தொண்டை வலியால் குறைந்த ரத்த அழுத்தம், உறுப்புச் செயலிழப்பு முதலியவை ஏற்படக்கூடும். மரணத்துக்குக்கூட அது இட்டுச் செல்லக்கூடும் என்றும் கூறப்பட்டது. […]