ஆசியா

மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா!

வட கொரியா இன்று (02.04) நடுத்தர தூர ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளது. கிம் ஜாங் உன்னின் ஆட்சியால் தடைசெய்யப்பட்ட ஆயுத சோதனைகளில் இது சமீபத்தியது என சியோலின் இராணுவம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் மூன்றாவது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை இதுவாகும்.

புதிய வகை இடைநிலை-தடுப்பு ஹைப்பர்சோனிக் ஏவுகணை”க்கான என்ஜின் சோதனையை கிம் மேற்பார்வையிட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த சோதனை வந்துள்ளது.

ஏவுகணை ஏவப்பட்டதை டோக்கியோ உறுதிப்படுத்தியதுடன், கடலோரக் காவல்படை கப்பல்கள் விழிப்புடன் இருக்குமாறும், விழுந்த பொருட்களை அணுகாமல் அவை குறித்து தெரியப்படுத்துமாறும்  வலியுறுத்தியது.

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறுகையில், இது பிராந்தியத்திற்கான அச்சுறுத்தல் என்றும், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்