இலங்கை

தேராவில் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் : யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாலை வேளையிலேயே ஊர்மனைக்குள் வருகின்ற யானைகள் அதிகாலை வரை ஊரில் உள்ள பயன் தர மரங்கள் மற்றும் தோட்ட செய்கைகள் சொத்துக்கள் என பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதோடு இதனால் தொடர்ச்சியாக தாம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அண்மை நாட்களாக வருகை தந்த யானைகள் தங்களது பயன்தரு தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நாசம் செய்துள்ளதோடு வேலிகளுக்காக போட்ட தூண்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளது இதனால் வீடுகளில் வாழும் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டியுள்ளதோடு இதனால் தமது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யானை வேலிகள் அமைப்பதாக பல தடவைகள் கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான எந்த விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படாமல் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் தமது பகுதிகளுக்கு யானை வேதிகளை அமைத்து யானை தொல்லையிலிருந்து தம்மை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பல்வேறு இடங்களிலும் யானைகளினால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பதாக தமது பகுதிக்கு யானை வேலியை அமைத்து தனது பயிர்கள் மற்றும் உடைமைகள் உயிர்களை பாதுகாக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்