ஸ்பெயின்: நான்கு பெண்களின் சடலங்களுடன் மத்திய தரைக்கடலில் மிதந்து வந்த படகு!
ஸ்பெயின் நாட்டின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகு தத்தளித்தபடி மிதந்து வந்ததை கடற்படையினர் கண்டறிந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அதில் 4 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த படகை இன்று காலையில் கார்டஜினா துறைமுகத்திற்கு மீட்புக்குழுவினர் இழுத்து வந்தனர். படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். அவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், […]













