இலங்கை

குருநாகல் – வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

  • April 18, 2024
  • 0 Comments

குருநாகல், ரிதிகம பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் இன்று காலை தனியார் காணி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய கோழி இறைச்சி விற்பனையாளர் என தெரியவந்துள்ளது. கொலையை செய்த சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் […]

பொழுதுபோக்கு

மகாபாரத கதையை கையில் எடுத்தார் லிங்குசாமி

  • April 18, 2024
  • 0 Comments

ரசிகர்கள் விரும்பும் வகையிலான படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. பின்னர் பட தயாரிப்பிலும் இறங்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரே நேரத்தில் உத்தம வில்லன் படத்தை தயாரித்ததன் மூலமாகவும் அஞ்சான் படத்தை இயக்கியதன் மூலமாகவும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார். அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து வாரியர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. கார்த்தியை வைத்து இவர் இயக்கிய […]

ஆசியா

இஸ்ரேலிய கிளவுட் ஒப்பந்தத்தை எதிர்த்த 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்

இஸ்ரேலிய அரசாங்கத்துடனான நிறுவனத்தின் கிளவுட் ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டங்களில் சில ஊழியர்கள் பங்கேற்றதை அடுத்து 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூகிள் தெரிவித்துள்ளது. ஒரு சில குறிப்பிடப்படாத அலுவலக இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளே நுழைந்து பணியை சீர்குலைத்ததாக ஆல்பாபெட் பிரிவு கூறியது . “மற்ற ஊழியர்களின் பணியை உடல் ரீதியாக தடை செய்வது மற்றும் எங்கள் வசதிகளை அணுகுவதைத் தடுப்பது எங்கள் கொள்கைகளின் தெளிவான மீறல் மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத […]

வட அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத நுழைவு… கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்!

  • April 18, 2024
  • 0 Comments

இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்தார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அட்லாண்டாவில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அட்லாண்டாவின் செயின்ட் மேரிஸ் நகரில் உள்ள தென்கிழக்கு ஜார்ஜியா சுகாதார நிலையத்தில் கடந்த 15ம் திகதி ஜஸ்பால் சிங் மரணம் அடைந்துள்ளார். அவர் மரணம் அடைந்த […]

இலங்கை

இலங்கை : குடும்பத்தினருடன் காசல்ரி நீர்த்தேகத்திற்கு சென்ற மாணவருக்கு நேர்ந்த துயரம்!

  • April 18, 2024
  • 0 Comments

காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளார். இந்த பாடசாலை மாணவன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து குழந்தையின் சடலத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு […]

இலங்கை

மன்னார் – செட்டிக்குளம் பகுதியில் யானைகளால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு!

  • April 18, 2024
  • 0 Comments

செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுதிய சம்பவம் இன்று (18.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர் முன்பாக டயலொக் மற்றும் மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினரால் அமைக்கப்பட்ட பதினாறு தொலைத்தொடர்பு கம்பங்களை யானைகள் உடைத்து துவம்சம் பண்ணியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று திருத்தல் பணிகளை மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். அண்மை காலங்களாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு […]

இந்தியா

ஜார்கண்ட் – பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி இளைஞர் பலியான சோகம்!

  • April 18, 2024
  • 0 Comments

ஜார்கண்ட் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில், 30 வயது பழங்குடி இளைஞர் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள படா டங்கா பாரா பகுதியைச் சேர்ந்த ஹரி நாராயண் பஹாரியா. இவர் நேற்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பொலிஸார் கூறிய தகவல்படி, கடந்த 16ம் திகதி, சுந்தர் பஹாரி பொலிஸில் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார், […]

இலங்கை

முல்லைத்தீவு – கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்

  • April 18, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (18.04.2024) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் (ஆ) பகுதியிலுள்ள காட்டுப் பகுதியால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் […]

இலங்கை

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

  • April 18, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குள் அடங்கும் பாலமுனை கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலமுனை கடற்கரையோரம் கரை ஒதுங்கிய குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் எவ்வாறு மரணமானார் என்பது குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த பெண்ணின் சடலம் தற்போது காத்தான்குடி பாலமுனை கடற்கரை ஓரம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பணத்திற்கு விற்கப்படும் விசாக்கள்? – உள்துறை அலுவலக ஊழியரின் மோசடி அம்பலம்

  • April 18, 2024
  • 0 Comments

வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானிய வதிவிட உரிமத்தை (விசா) விற்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் உள்துறை அலுவலக வழக்குப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பணியாளர் புகலிடக் கோரிக்கையாளரைத் தொடர்புகொண்டு தனது அகதி விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக 2,000 பவுண்ட் கேட்டதாகக் கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூத்த பணியாளர் அந்த நபரைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் மோசடி முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியமான உள்துறை அலுவலகப் பதிவுகள் பயன்படுத்தப்பட்டதாகக் […]