IPL Match 35 – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. […]













