செய்தி விளையாட்டு

IPL Match 35 – மீண்டும் இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர்.

இதன் மூலம் ஐதராபாத் அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்களை குவித்தது.

பவர்பிளே முடிந்த கையொடு அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது.

அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content