குடும்ப பிரச்சினை காரணமாக 9 மாத சிசுவை கிணற்றில் வீசி சென்ற தாய்
மஹாபாகே , ராகம , ஹல்லந்துருவ பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நீரில் மிதந்த நிலையில் 9 மாத பெண் சிசுவின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளது. ஹலந்துருவ ராகம பகுதியைச் சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த சிசு காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது , தாயே தன் சிசுவை தூக்கி சென்று கிணற்றில் வீசுவது அருகிலிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது […]













