உலகம் செய்தி

ஈரானிடம் நவீன தொழில்நுட்ப வலிமை: 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் அழிப்பு!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் விமானப்படை தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். நவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்க ஈரானிய படையினர் புதுமையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர் எனவும் ஈரான் விமானப்படை தளபதி குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய போர் உத்திகள் எதிரி நாடுகளுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரிகேடியர் ஜெனரல் […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உக்ரைன் தாக்குதல்: ஒருவர் பலி!

  • April 4, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தெற்கு பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். Taganrog நகரில் உள்ள வணிகக் கட்டிடங்கள் Commercial infrastructure தீக்கிரையாக்கப்பட்டதுடன், அசோவ் Azov கடலில் இருந்த ஒரு சரக்குக் கப்பலும் சேதமடைந்துள்ளது. மேலும், ரஷ்யாவின் முக்கியமான ரசாயன உற்பத்தி மையமான டோக்லியாட்டி பகுதியையும் உக்ரைன் ட்ரோன்கள் குறிவைத்துள்ளன.    

உலகம் செய்தி

ட்ரம்புக்கு கெட்ட காலம்: போர் விமானத்தால் வரப்போகும் வினை!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடைந்துவிட்டது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth அறிவிப்பு விடுத்து சில நாட்களுக்குள்ளேயே ஈரான் தனது வலிமையை நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியே ஈரான் தனது வலிமையை நிரூபித்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாயமாகியுள்ள அமெரிக்க படை வீரர் ஈரானிடம் சிக்கினால், அது போரின் போக்கை மாற்றி ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எரிபொருள் விலை […]

பொழுதுபோக்கு

சம்பளத்திலும் உச்சம் தொட்ட நயன்தாரா!

  • April 4, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் நயன்தாரா வாங்கும் சம்பளம் தொடர்பான லேட்டஸ் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கின்றார். அதேபோல படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். குடைசியாக ‘மனசங்கர வர பிரசாத் காரு’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது சம்பளம் இந்திய நாணய மதிப்பில் 10 கோடி ரூபா என தெரியவருகின்றது. இந்நிலையில் வம்சி பைடிபள்ளி […]

உலகம்

ஈரான் போர் : மிகையான நம்பிக்கையில் ட்ரம்ப் – கவலையில் வெள்ளை மாளிகை பணியாளர்!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரான் போர் மற்றும் அதன் உள்நாட்டுத் தாக்கங்கள் குறித்து, தனது உதவியாளர்கள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு  மிகையான நம்பிக்கையூட்டும் பார்வையை அளிப்பதாக வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் (Susie Wiles)  கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதல் உலக நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை பிரச்சினை பொருளதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அத்துடன் , 13 அமெரிக்கப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பூமியின் பிரமிக்க வைக்கும் படங்களைப் பிடித்த ஆர்டெமிஸ் II !

  • April 4, 2026
  • 0 Comments

ஆர்டெமிஸ் II  (Artemis II) விண்வெளி வீரர்கள் நிலவை நெருங்கிச் செல்லும் பயணத்தின்போது, பூமியின் பிரமிக்க வைக்கும் படங்களைப் படம்பிடித்துள்ளனர். குறித்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்தப் படங்களில், விண்கலத்தின் சாளரத்திலிருந்து தெரியும் பூமியின் வளைந்த பகுதியும், சுழலும் மேகங்களுடன் கூடிய புவியின் முழுமையான காட்சி பதிவாகியுள்ளது. மூன்று அமெரிக்கர்கள் மற்றும் கனேடியர் ஒருவர் உள்ளடங்களாக பயணிக்கும் குழுவினர் வரும் திங்கட்கிழமை நிலவை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நேராக பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு, தங்கள் ஓரியன் […]

இந்தியா செய்தி

இந்திய கடற்படைக்கு 3 ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!

  • April 4, 2026
  • 0 Comments

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. ஐஎன்எஸ் அரிதாமன் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி நீர்மூழ்கி கப்பல் 7,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தும் இந்த நீர்மூழ்கி கப்பலில் 90 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. தண்ணீருக்குள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் பயணிக்கும். இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹன்ட் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் புதிய வகை COVID – 19!

  • April 4, 2026
  • 0 Comments

“சிக்காடா” Cicada என்றழைக்கப்படும் BA.3.2 வகை புதிய கோவிட்-19 COVID வைரஸ் ஆஸ்திரேலியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவந்த நிலையிலேயே, தற்போது பசுபிக் நாடுகளிலும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனினும், முந்தைய கோவிட் வகைகளை விட புதிய வகை வைரஸ் அதிக ஆபத்தானது இல்லை எனக் கூறப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் […]

உலகம்

அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் – பேச்சுவார்த்தைகளை பாதிக்குமா?

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானில் அமெரிக்க ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், ஒரு மாத காலமாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது என்று ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த, காணாமல் போன விமானிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை அவர் கூற மறுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் போர் விமானமான F-15 நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானப் பணியாளர் ஒருவர் […]

உலகம் செய்தி

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை: 365 அமெரிக்க படையினர் காயம்!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் காரணமாக இதுவரையில் 365 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். பென்டகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 247 ராணுவத்தினரும், 63 கடற்படையினரும், 36 விமானப் படையினரும், படையினருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். போரில் 13 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்தன. இன்று 36ஆவது நாளாக போர் தொடகின்றது.