உலகம்

அமெரிக்காவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் !

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் (IGRC) தெரிவித்துள்ளது. குறித்த விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விமானம் வீழ்ந்து வெடித்த வேகத்தைப் பார்க்கும்போது, விமானி அதிலிருந்து வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் செய்தி

அமெரிக்காவால் ஹார்முஸ் நீரிணையை எளிதாக திறக்க முடியும் – ட்ரம்ப் இன் புதிய பதிவு

  • April 3, 2026
  • 0 Comments

இன்னும் சிறிது காலம் கிடைத்தால் அமெரிக்காவால் ஹார்முஸ் நீரிணையை எளிதாக திறக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “நம்மால் நீரிணையை திறந்து , பெரும் செல்வம் ஈட்ட முடியும். அது உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் .” என்றார். நீரிணையை மீண்டும் திறப்பது எப்படி என்பது குறித்து ட்ரம்ப் பல முறை மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார். […]

உலகம் கல்வி

குவைத்தின் பாதுகாப்புக்காக களமிறங்கும் பிரிட்டன்!

  • April 3, 2026
  • 0 Comments

குவைத்தின் Kuwait எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்குரிய பாதுகாப்பு உதவியை வழங்க பிரிட்டன் UK பிரதமர் Keir Starmer முன்வந்துள்ளார் என தெரியவருகின்றது. இதற்கமைய பிரிட்டன் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை Air defence systems குவைத்தில் நிலைநிறுத்துவது குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி பாதுகாப்பு ஏற்பாட்டுக்குரிய முன்மொழிவானது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை தணிக்க உதவும் என்பதுடன், அங்குள்ள […]

உலகம் செய்தி

லெபனானில் வெடிவிபத்தில் ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

  • April 3, 2026
  • 0 Comments

லெபனானில் இன்று நடந்த வெடிவிபத்தில் மூன்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் காயமடைந்துள்ளதாக யூனிஃபில் (UNIFIL) தெரிவித்துள்ளது. அதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தெற்கு லெபனானில் எல் அடீஸ் அருகே நடைபெற்றது. வெடிவிபத்து எங்கிருந்து தொடங்கியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று யூனிஃபில் செய்தியாளர் கண்டிஸ் ஆர்டியல் தெரிவித்தார். காயமடைந்த மூன்று அமைதிப்படையினரும் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் லெபனானில்    வெடிவிபத்துகளில், மூன்று ஐ.நா. அமைதிப்படையினர் உயிரிழந்திருந்தனர்.

உலகம் செய்தி

ட்ரம்பின் மிரட்டல் போர்க்குற்றம்: ஈரான் ஜனாதிபதி பதிலடி!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானை கற்காலத்திற்கே கொண்டுசெல்வோம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump கூற்றுக்கு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டல் பாரிய போர்க்குற்றத்தைச் செய்வதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “இது தொடர்பில் சட்ட நிபுணரான பின்லாந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். குற்றவாளிகளின் செயல்களுக்கு எதிராக மௌனம் காப்பவர்கள் வரலாற்றில் பெரும் விலையை கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.” என ஈரான் ஜனாதிபதி […]

உலகம்

அமெரிக்காவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!

  • April 3, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. “காலம் கடப்பதற்குள் ஒரு உடன்பாட்டிற்கு வருமாறு” தெஹ்ரானை வலியுறுத்தி, ஈரானிய பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டு வீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தொடர்புடைய செய்தி ஈரானை கற்காலத்திற்கு திருப்பி அனுப்ப ட்ரம்ப் சபதம்!  

செய்தி தமிழ்நாடு

தேர்தலன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு

  • April 3, 2026
  • 0 Comments

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 135பி-ன்படி எந்த ஒரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் அமைப்பில் பணிபுரிபவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் […]

உலகம் செய்தி

ஈரானின் தொழில்முறை முடக்கம்: இஸ்ரேல் பிரதமர் சுட்டிக்காட்டு!

  • April 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரானின் எஃகு steel உற்பத்தித் திறனில் 70 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் நிதி ஆதாரங்களையும் ஆயுத உற்பத்தித் திறனையும் முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார். ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத எஃகு ஆலைகள் போன்ற பொது மக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை […]

இலங்கை செய்தி

சாதனை படைத்த கிளிநொச்சி மாணவனுக்கு தமிழரசுக் கட்சி பாராட்டு!

  • April 3, 2026
  • 0 Comments

உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரனை, இலங்கைத் தமிழரசுக் கட்சி ITAK கௌரவித்துள்ளது. தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவன் திருக்குமரனின் இல்லத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் M.A. Sumanthiran நேரில் விஜயம் செய்தார்.  இதன்போது, மாணவனின் சாதனையைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்த ஜனாதிபதி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’!

  • April 3, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.கவின் BJP வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு இடமளிக்கப்படாமை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலானோர் கணித்தபடியே வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும், எவரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’ விழுந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தேர்தலுக்கான தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் இம்முறை நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்தது. இதனால், அவர்கள் அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். […]