உலகம் செய்தி

அமெரிக்க போர் விமானங்கள்மீது தாக்குதல்: ஈரான் மக்கள் கொண்டாட்டம்!

  • April 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கு சொந்தமான இரு ராணுவ விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், அந்நாட்டில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் மேற்படி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. இது மகத்தான வெற்றி எனக் கருதி ஈரான் மக்கள் தெருக்களில் கொண்டாடிவருகின்றனர். இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவு என ஈரான் மக்கள் கருதுகின்றனர். தங்களின் ராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு இது ஒரு தகுந்த பதிலடி என்று ஈரான் அரசு […]

உலகம்

அமெரிக்காவின் தேடுதல் ஹெலிகாப்டர்களும் இலக்கு – ஈரானின் அதிரடி தாக்குதல்!

  • April 4, 2026
  • 0 Comments

பாரசீக வளைகுடாப் பகுதியில் நேற்றைய தினம் அமெரிக்காவின் போர் விமானத்தை ஈரான் தாக்கி அழித்திருந்த நிலையில்,  தேடுதல் ஹெலிகாப்டர்களை தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானத்தை தேடும் பணியில் இருந்த ஹெலிகாப்டர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த பணியாளர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை  A-10 தாக்குதல் விமானம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதில், அதன் விமானி சேதமடைந்த விமானத்தை குவைத் […]

விளையாட்டு

IPL இன்றைய போட்டிகள்….!

  • April 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (04) இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்கமைய 8 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் Delhi Capitals , மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணிகள் களம் காண்கின்றன. இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும். 9 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans , ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். […]

செய்தி விளையாட்டு

CSK அணி மீண்டும் தோல்வி!

  • April 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் தமது அணி களம் கண்ட 2ஆவது போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி Chennai Super Kings தோல்வி அடைந்துள்ளது. IPL 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் Punjab Kings அணிகள் நேற்று மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மரணம்!!

  • April 4, 2026
  • 0 Comments

திருகோணமலை கந்தளாய், பேராற்றுவெளி பகுதியிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது.   நான்கு இளைஞர்கள் குறித்த ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். வழமை போன்று ஆற்றில் நீர் அதிகமாக இருக்கும் ஒரு இடத்தில் குளிக்க ஆரம்பித்து நீரோட்டத்துடன் மிதந்து சென்று, அதற்கு அடுத்ததாக உள்ள பகுதியில் கரையேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்றைய தினமும் அவ்வாறே குளித்த நிலையில், அவருடன் வந்த நண்பர்கள் குறித்த இளைஞன் அடுத்த இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் […]

உலகம் முக்கிய செய்திகள்

பின்வாங்கும் அமெரிக்கா – 48 மணிநேர போர் நிறுத்தம் முன்மொழிவு!

  • April 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் வளர்ந்துவரும் பதற்றங்களை தொடர்ந்து 48 மணிநேர போர் நிறுத்தத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இருப்பினும் குறித்த முன்மொழிவை தெஹ்ரான் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவர் ஈரானின் அரச ஊடகத்திடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்கா தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

உலகம் செய்தி

தெஹ்ரான், பெய்ரூட்டில் தாக்குதல் தீவிரம் – மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிப்பு

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் நகரங்களை இலக்காகக் கொண்டு புதிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரான் மீது மேலும் ஒரு கட்டத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ட்ரோன்களை இலக்கு வைத்து 70-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்பாக, தெற்கு ஈரானில் […]

உலகம் செய்தி

மோதல்  காரணமாக உலக உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக உலகெங்கிலும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளை அளவிடும் தனது மாதாந்திர உணவு விலைக் குறியீடு, பெப்ரவரி முதல் மார்ச் வரை 2.4% அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கூறுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுடன் தொடர்புடைய எரிசக்தி விலைகள் அதிகரித்ததன் காரணமாக, இந்தக் குறியீடு தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது […]

ஐரோப்பா

ஹோர்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சென்ற பிரான்ஸ் கப்பல்!

  • April 3, 2026
  • 0 Comments

பிரெஞ்சு கப்பல் குழுமமான CMA CGM-க்குச் சொந்தமான  கொள்கலன் கப்பல் ஒன்று , நேற்றைய தினம் ஹோர்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சென்றுள்ளது. ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த முக்கியமான கடல்வழிப் போக்குவரத்து  பகுதியைக் கடந்து செல்லும் முதல் பிரெஞ்சு கப்பல் இதுவாகும். இந்நடவடிக்கையானது ஈரான் பிரான்ஸை ஒரு விரோத நாடாகக் கருதாமல் இருக்கலாம் என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது. அத்துடன் ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பிற்குள் நுழைவதற்கு முன்பு, நடுநிலைமையைக் குறிக்கும் வகையில், […]

இந்தியா

புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரச்சாரம்

  • April 3, 2026
  • 0 Comments

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தினார். இருபுறமும் கட்சியினர், மக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2, லஜக 2 என 30 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டு, பிரச்சாரமும் உடனடியாக தொடங்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் கடந்த […]