ஐரோப்பா

லண்டனில் 14 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!

  • April 3, 2026
  • 0 Comments

லண்டனின் வூல்விச்சில் (Woolwich) 14 வயதுடைய சிறுவன் ஒருவர் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் பதின்ம வயதுடைய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சாட்சிகள், சிசிடிவி அல்லது டாஷ்கேம் காணொளிகள் இருந்தால் வழங்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

உலகம் செய்தி

ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு செயல்பாடுகள் தீவிரம்

  • April 3, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம் இன்று தனது வான்பாதுகாப்புப் படைகள் 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மொத்தமாக 47  ட்ரோன்கள் , 18 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 4 குரூஸ் ஏவுகணைகள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரான் நாட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் புதிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டின் வான்பாதுகாப்பு […]

இலங்கை செய்தி

காலியில் இருவர் வெட்டிக்கொலை – ஒருவர் வைத்தியசாலையில்

  • April 3, 2026
  • 0 Comments

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். இன்று காலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த குடும்பத்தின் பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

குவைட்டில் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்

  • April 3, 2026
  • 0 Comments

குவைட்டில் மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம், அமெரிக்கா மற்றும்  இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தும் போரின் 35 வது நாளில் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்பு இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டாலும், சேதத்தின் முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன்பு, Mina Al-Ahmadi Refinery (மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை) மீது […]

இலங்கை

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் கட்சித் தலைவர் பங்கேற்றமைக்கு இம்ரான் மகரூப் எம்.பி கடும் அதிருப்தி!

  • April 3, 2026
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கலந்து கொண்ட செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியை […]

உலகம் செய்தி

ஆர்டெமிஸ் II – மீண்டும் நிலவை நோக்கிய மனிதர்களின்  பயணம்

  • April 3, 2026
  • 0 Comments

Artemis II mission திட்டத்தில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்கள், தங்களது Orion spacecraft விண்கலத்தின் பிரதான இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கியதைத் தொடர்ந்து, பூமியின் சுற்றுவட்டப்பாதையை விட்டு வெளியேறினர். “டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன் (TLI)” எனப்படும் இந்த முக்கிய கட்டம் சுமார் 5 நிமிடம் 55 வினாடிகள் நீடித்து, “குறைபாடற்ற முறையில்” நிறைவேற்றப்பட்டதாக நாசாவின் டாக்டர் லோரி கிளேஸ் தெரிவித்தார். விண்கலத்திலிருந்து பேசிய கனடிய விண்வெளி வீரர் Jeremy Hansen, “நிலவை நோக்கிய எங்கள் பயணம் சிறப்பாக நடைபெற்று […]

உலகம் செய்தி

ஈரானின் ராணுவ வலிமை அழியவில்லை: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிடம் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆளில்லா விமானங்கள் எஞ்சியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் ஆயுதக் கிடங்குகள் பெருமளவு சிதைக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு மாறாக உளவுத் தகவல்கள் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும்: ஈரான் சபதம்!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும் என்று ஈரான் இராணுவம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தினால், அதற்குப் பதிலடியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தொடர்புள்ள எரிசக்தி மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள நாடுகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஈரானின் முக்கியப் பாலத்தை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ள நிலையிலேயே ஈரான் […]

இலங்கை செய்தி

வடக்கில் பிரதான இரு செயல்திட்டங்கள்: உலக வங்கி அனுமதி!

  • April 3, 2026
  • 0 Comments

உலக வங்கியின் நிதியுதவியுடன் ‘ரிவைவ்’ (REVIVE) திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. உலக வங்கிப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை இன்று (03) சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த முதற்கட்டத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் இறங்குதுறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இரு இடங்களையும் மையப்படுத்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே உலக வங்கியால் […]

உலகம் செய்தி

“பாலம்மீதான தாக்குதல் எதிரணியின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது”

  • April 3, 2026
  • 0 Comments

“முற்றுப்பெறாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது.” இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார். இப்படியான தாக்குதல்கள் நிலைகுலைந்துபோன ஒரு எதிரியின் தோல்வியையும், தார்மிக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் […]