இலங்கை

மண்சரிவு எச்சரிக்கை!

  • April 5, 2026
  • 0 Comments

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் ‘அவதானத்துடன் இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நேற்று (04) மாலை 5.00 மணி முதல் இன்று மாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் […]

இலங்கை

தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு!

  • April 5, 2026
  • 0 Comments

இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று!

  • April 5, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும் (05). இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததையே கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இயேசுவின் துன்பப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு […]

உலகம் செய்தி

அமெரிக்கப் போர் விமானங்கள் வீழ்ச்சி – அரிதான சம்பவங்களின் அதிர்ச்சி பின்னணி

  • April 4, 2026
  • 0 Comments

அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் மிகவும் அரிதாகவே பதிவாகியுள்ளன. மார்ச் மாத தொடக்கத்தில், குவைட் வான்வெளியில் பறந்த மூன்று F-15 fighter jet போர் விமானங்கள் “தற்செயலான நட்பு தாக்குதல்” காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையமான CENTCOM தெரிவித்தது. இதில் இருந்த ஆறு விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அதே மாதம் 12ஆம் திகதி, மேற்கு ஈராக் பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், எரிபொருள் நிரப்பும் […]

செய்தி தமிழ்நாடு

அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ் தற்போது விற்றுவிட்டார் – உதயநிதி

  • April 4, 2026
  • 0 Comments

“கடந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த பழனிசாமி, இந்த முறை விற்றுவிட்டார்” என துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்தார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி இவ்வாறு கருத்து வெளியிட்டார். “ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அந்த தைரியத்தில் தான் இந்த முறை வாக்கு கேட்டு வந்துள்ளேன். அதிமுக ஆட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை 2019 […]

இந்தியா செய்தி

சிசிடிவி, ஒன்லைன் செயலிகள் மூலம் ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்கும் ஆபத்து

  • April 4, 2026
  • 0 Comments

அரசு அலுவலகங்கள் உட்பட முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள சீனக் கேமராக்கள் வாயிலாக நடைபெறும் வெளிநாட்டு கண்காணிப்பு மற்றும் ஒன்லைன் செயலிகள் மூலம் ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் ஆபத்திற்குள்ளாக்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியாவை இருளில் வைத்திருப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி என்று குற்றம் சுமத்தி முகப்புத்தகத்தில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், “பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சீன சிசிடிவி கேமராக்களை அரசு சமீபத்தில் தடை செய்தது. இருப்பினும், அரசு கட்டிடங்களுக்குள் சீனக் கேமராக்கள் தொடர்ந்து […]

உலகம் செய்தி

ஹார்மூஸை திறக்க உத்தரவு- 48 மணி நேர காலவகாசம்

  • April 4, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்  , ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். Hormuz நீரிணையை திறக்க அல்லது ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இணங்காவிட்டால்  “கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த கருத்துகளை அவர் தனது Truth Social தளத்தில் வெளியிட்டுள்ளார். முன்பு, மார்ச் 27 அன்று, ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது 10 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று அவர் […]

உலகம் செய்தி

ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானின் முக்கிய படை தளபதிகளுள் ஒருவராக திகழ்ந்த காசிம் சுலைமானியின் General Qassem Soleimani உறவினர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிம் சுலைமானியின் சகோதரி Hamideh Soleimani ⁠Afshar மற்றும் அவரது மகள் ஆகியோரே அமெரிக்க குடியுரிமைத் துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நிரந்தர வசிப்பிட உரிமையை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவின் […]

இந்தியா

07 ஆண்டுகளுக்கு பின் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா!

  • April 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு மோதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளன. இந்திய பெட்ரோலிய அமைச்சகம் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான  இந்தியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த  2019 முதல் ஈரானுடனான எரிபொருள் கொள்வனவை இந்தியா […]

இலங்கை

பண்ணைப் பகுதி வாள்வெட்டுச் சம்பவம் – கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன்

  • April 4, 2026
  • 0 Comments

பண்ணைப் பகுதி வாள்வெட்டுச் சம்பவம் – கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன் யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே, மருதனார்மடம் பகுதியில் வைத்து நேற்றைய தினம் (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் […]