ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் புதிய வகை COVID – 19!

“சிக்காடா” Cicada என்றழைக்கப்படும் BA.3.2 வகை புதிய கோவிட்-19 COVID வைரஸ் ஆஸ்திரேலியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவந்த நிலையிலேயே, தற்போது பசுபிக் நாடுகளிலும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

எனினும், முந்தைய கோவிட் வகைகளை விட புதிய வகை வைரஸ் அதிக ஆபத்தானது இல்லை எனக் கூறப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் இந்த மரபணு மாற்றத்தைக் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வைரஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி