ஐரோப்பா

“கடைசி எச்சரிக்கை மொழியைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்” – ரஷ்யா அழைப்பு!

  • April 5, 2026
  • 0 Comments

அமெரிக்கா – ஈரான் இடையிலான   மோதலைத் தணிப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கும் என்று ரஷ்யா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. “கடைசி எச்சரிக்கை மொழியைக் கைவிட்டு, நிலைமையை பேச்சுவார்த்தைப் பாதைக்குத் திருப்புவதன் மூலம்” அமெரிக்கா பங்களிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) ஆகியோருக்கு இடையேயான உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் […]

ஐரோப்பா

ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற படகு விபத்து – 71 பேர் மாயம்!

  • April 5, 2026
  • 0 Comments

லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு ஒன்று இன்று விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 32 பேர்  மீட்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய 71  பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் இத்தாலியத் தீவான லம்பெடுசாவிற்குக் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக கேள்விகளுக்கு இத்தாலிய கடலோர காவல்படை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற முனைப்பு காட்டும் ட்ரம்ப்!

  • April 5, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க 48 மணிநேரம் கெடு விதித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நாளை ஒரு ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு “நல்ல வாய்ப்பு” இருப்பதாகவும், ஈரான் “தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று  தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. “அவர்கள் விரைவாக ஒரு ஒப்பந்தம் செய்யாவிட்டால், எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு எண்ணெயைக் கைப்பற்றுவது குறித்து நான் பரிசீலித்து வருகிறேன்,” என்று அவர் மேலும் கூறியதாக அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே […]

இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலையும் சடுதியாக அதிகரிப்பு

  • April 5, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாகும் அதேநேரம் 5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,280 ரூபாயாகும்.

உலகம்

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் – 15 பேர் காயம்!

  • April 5, 2026
  • 0 Comments

அமெரிக்காவின்  புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று  மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லூசியானாவில் (Louisian)  அமைந்துள்ள  லானெக்சாங் (Lanexang ) கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் இருவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது சாரதி மது அருந்தியிருந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 57 வயதான டாட் லேண்ட்ரி (Todd Landry) என்ற நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது முதல் […]

இலங்கை செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உச்சம் தொட்டது – இன்று நள்ளிரவு முதல் அமுல்

  • April 5, 2026
  • 0 Comments

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4, 765 ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை, ஆயிரத்து 910 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 […]

உலகம்

இணைய முடக்கம் – உலகளவில் ஈரானுக்குதான் முதலிடம்!

  • April 5, 2026
  • 0 Comments

ஈரானில் ஏற்பட்ட இணைய முடக்கம், எந்தவொரு நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக நீண்ட நாடு தழுவிய இணைய முடக்கமாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய அனைத்து உலகளாவிய சாதனைகளையும் விஞ்சியுள்ளது. இந்த இணைய முடக்கம் 864 மணிநேரம் நீடித்துள்ளதாகவும், இந்த நிலைமை ஈரானியர்களை வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் இருந்து திடீர் விலகல்!

  • April 5, 2026
  • 0 Comments

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் X பக்கத்தில் , சமூக ஊடகங்களிலிருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். இரண்டு வானம், கட்டாகுஸ்தி 2 ஆகிய படங்களின் updates-களுடன் விரைவில் திரும்புவேன் என பதிவிட்டுள்ளார்.

உலகம் செய்தி

பெய்ரூட்டில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலி – நால்வர் பலி, மேலும் 39 பேர் காயம்

  • April 5, 2026
  • 0 Comments

தெற்கு பெய்ரூட்டின் ஜ்னா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, இந்தத் தாக்குதலில் மேலும் 39 பேர் காயமடைந்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் தலைநகரில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகளைத் தாக்கி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தது. இன்று நடந்த பல தாக்குதல்களைத் தொடர்ந்து, தெற்கு பெய்ரூட்டின் பகுதிகளில் இருந்து புகை எழுவதை படங்கள் பதிவு செய்துள்ளன. முன்னதாக, தெற்கு […]

செய்தி

இலங்கைக்கு கைகொடுக்கும் சீனா!

  • April 5, 2026
  • 0 Comments

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாளை (06) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டை வந்தடையும் திகதி ஆகியன தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.