இந்தியா செய்தி

இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

  • April 5, 2026
  • 0 Comments

“இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். அசாமின் நிலத்தை அம்பானி, அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரிடம் அவர் ஒப்படைத்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் பிஸ்வநாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “உங்கள் முதல்வர் 24 மணி நேரமும் அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார் என கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி எங்கே – அரசாங்கத்திடம் சஜித் கேள்வி

  • April 5, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை ஒரு தேசமாக நாம் அடைந்த பாரிய தோல்வியென்றும் அவர் ஆதங்கம் […]

ஐரோப்பா

பிரான்ஸ் பிரஜைக்கு சீனாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

  • April 5, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 62 வயதான பிரெஞ்சு குடிமகன் சான் தாவோ ஃபூமியை சீனா தூக்கிலிட்டுள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2010-ல் சீன நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஃபூமி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், தற்போது தூக்கிலிடப்பட்டுள்ளார். இறுதி நீதிமன்ற விசாரணையை ஃபூமியின் தரப்பு வழக்கறிஞர்கள் அணுக அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்த பிரஞ்சு வெளியுறவு அமைச்சகம்  ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும்  அனைத்து பிரதிவாதிகளையும் சமமாக நடத்துவதாகவும், வழக்குகளை […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் ரஷ்யா பறக்கிறார் விஜித ஹேரத்!

  • April 5, 2026
  • 0 Comments

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே அவர் மாஸ்கோ Moscow செல்கின்றார். ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ மற்றும் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர். […]

ஐரோப்பா செய்தி

டேவ்’ புயல் தாக்கம் – பயணிகள் பெரும் சிரமம்

  • April 5, 2026
  • 0 Comments

Dave புயல் இங்கிலாந்தை தாக்கியதால் பலத்த காற்று, பலத்த மழை மற்றும் சில பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகி, வீதி மற்றும் ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, வடமேற்கு வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தின் பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் இரவு முழுவதும் பலத்த காற்று வீசிய நிலையில், வெளியிடப்பட்டிருந்த மஞ்சள் நிற எச்சரிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை காலை விலக்கிக் கொள்ளப்பட்டன. மேலும், வடக்கு இங்கிலாந்து, வடமேற்கு வேல்ஸ் மற்றும் தெற்கு ஸ்காட்லாந்தில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் […]

ஐரோப்பா செய்தி

வயர்லெஸ் விழாவில் ‘யே’ பங்கேற்பு சர்ச்சை – பிரதமர் கவலை, பெப்சி ஆதரவு வாபஸ்

  • April 5, 2026
  • 0 Comments

இந்த கோடையில் லண்டனில் நடைபெறவுள்ள Wireless Festival நிகழ்ச்சியில் Kanye West முக்கியக் கலைஞராக பங்கேற்பது குறித்து பிரதமர் Starmer கவலை வெளியிட்டுள்ளார். யூத விரோதக் கருத்துக்கள் தொடர்பாக விமர்சனங்களுக்கு உள்ளான யே, கடந்த ஜனவரியில் மன்னிப்பு கோரியிருந்தாலும், அவரை முக்கிய கலைஞராக அறிவித்திருப்பது “மிகுந்த கவலையளிக்கிறது” என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளாரட். இதன் பின்னணியில், விழாவின் முக்கிய ஆதரவாளரான Pepsi தனது ஆதரவை மூன்று நாள் நிகழ்ச்சிக்காக வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. “யூத விரோதம் […]

உலகம் செய்தி

குவைட் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதலால் பெரும் தீப்பரவல் – பாரியளவில் பொருள் சேதம்

  • April 5, 2026
  • 0 Comments

குவைட்டில் உள்ள பெட்ரோலியக் கழகத்தின் பல எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த தாக்குதலின் காரணமாக பொருள் சேதங்கள் பதிவாகியுள்ளதாக குவைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையெனஎன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

செய்தி தமிழ்நாடு

காமராஜரை டெல்லியிலுள்ள வீட்டில் கொலை செய்ய முயற்சி – ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

  • April 5, 2026
  • 0 Comments

முன்னாள் முதலமைச்சர் காமராஜரை டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து சங்கிக் கூட்டம் எரித்துக் கொல்ல முயற்சி செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர் , திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளரான அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் […]

இலங்கை

கந்தளாயில் ரயிலில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி

  • April 5, 2026
  • 0 Comments

கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் இடம்பெற்ற துயரமான ரயில் விபத்தில், சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஐ.ஆர். அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் திருமணமாகாதவர் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (04) இரவு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன், தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மோதியுள்ளார். வென்ராசன்புரயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு […]

உலகம் செய்தி

பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

  • April 5, 2026
  • 0 Comments

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களை இன்று அதிகாலையில் உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்த பின்னர் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) இடைமறித்துவிட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் கடற்கரைக்கு அப்பால் நேற்று இரவு ஒரு […]