பொழுதுபோக்கு

கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட பிரபல நடிகை!

  • April 5, 2026
  • 0 Comments

பிரபல நடிகை மிருணாள் தாகூர் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டதால் ரசிகர்ளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்காயிட்’ படம் எதிர்வரும் 10 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. பட விழாவுக்கு மிருணாள் தாகூர் கை விலங்குடன் திடீரென அழைத்து வரப்பட்டுள்ளார். […]

உலகம்

பதற்றத்திற்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்த இந்திய கப்பல்கள்!

  • April 5, 2026
  • 0 Comments

அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான தனது பிடியை இறுக்கியுள்ளது. இது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைத் தடைசெய்து, எரிசக்தி சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடல்சார் தரவுகளின்படி, இந்த முக்கிய கப்பல் வழித்தடத்தைக் கடக்கும் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்களில் 60 சதவீதம் ஈரானிலிருந்து வந்தவை அல்லது அங்கு சென்றுகொண்டிருந்தவை ஆகும். இருப்பினும், இந்த முற்றுகையையும் மீறி, இந்த வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையிலான கப்பல்களைக் கடந்து செல்லும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. மோதல் […]

உலகம்

கனடாவில் இந்து ஆலயங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி – பொலிஸார் எச்சரிக்கை!

  • April 5, 2026
  • 0 Comments

கனடாவில் உள்ள இரண்டு முக்கிய கோயில்களுக்கு வெளியே இன்று காலிஸ்தான் ஜிந்தாபாத் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் டொராண்டோ (Greater Toronto) பகுதியில் உள்ள  திரிவேணி ஆலயம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia)  சர்ரேயில் (Surrey) உள்ள லட்சுமி நாராயண் ஆலயத்தில்  இந்த பேரணிகள் இடம்பெறவுள்ளன. இந்தப் பேரணிகளுக்கான அழைப்பை, சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்ற பிரிவினைவாதக் குழு விடுத்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோதச் செயல்களும் குற்றச் செயல்களும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று சட்ட அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது. […]

ஐரோப்பா

உள்ளாட்சி தேர்தல் – கடும் அழுத்தத்தில் ஸ்டாமர்!

  • April 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் அடுத்த மாதம்  உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலில்  வேட்பாளர்களை நியமிக்கும் விடயத்தில் பிரதமர் கெயர் ஸ்டாமர் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி அதிகாரிகள் வேட்பாளர்களைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், உள்ளாட்சி மன்றக் குழுக்கள் உறுப்பினர்களைத் தங்கள் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாக சில மின்னஞ்சல்கள் கசிந்துள்ளன. மே மாதத்தில் தொழிலாளர் கட்சி பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளமையால் வேட்பாளர் நியமனம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. தென்மேற்கு லண்டனில் உள்ள சட்டன் நகரில், […]

உலகம் செய்தி

ஈரான் தாக்கிய போர் விமானத்தில் இருந்த 2ஆவது படை அதிகாரியையும் மீட்டது அமெரிக்கா!

  • April 5, 2026
  • 0 Comments

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் இருந்த இரண்டாவது படை அதிகாரியும் (Weapons Officer) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கர்னல் அந்தஸ்திலான விமானப்படை அதிகாருவரே துணிச்சலான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை ராணுவ வரலாற்றின் மிக முக்கியமான வெற்றியென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மேற்படி விமானத்தில் இருந்த மற்றொரு வீரரும் மீட்கப்பட்ட நிலையில், ஒரே […]

ஐரோப்பா செய்தி

டேவ் புயல் எதிரொலி – ஸ்கொட்லாந்தில் பனிப்பொழிவிற்கு வாய்ப்பு!

  • April 5, 2026
  • 0 Comments

‘டேவ் புயல் தொடர்ந்து வலுப்பெறுவதால்’, பிரித்தானிய மக்கள் கடும் பனிப்பொழிவு, சூறாவளிக் காற்று மற்றும் பரவலான மின்வெட்டுகளை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு காற்றுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்ப்டுள்ளது. பறக்கும் சிதறல்கள் ‘காயங்களை’ ஏற்படுத்தக்கூடும் அல்லது ‘உயிருக்கு ஆபத்தை’ விளைவிக்கக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை முன்னறிவிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை டேவ் புயலால் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பெய்யக்கூடிய […]

இலங்கை செய்தி

கொழும்புக்கு எரிபொருள் வழங்க பீஜிங் பச்சைக்கொடி!

  • April 5, 2026
  • 0 Comments

இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் கையிருப்பை உறுதிசெய்வதற்காக இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை உதவி கோரி இருந்தது. இதற்குரிய இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளும் இடம்பெற்றன. இந்நிலையிலேயே சீனா தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது சீனா எரிபொருளை […]

விளையாட்டு

IPL – 2026 : இன்றைய போட்டிகள்…!

  • April 5, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் Sunrisers Hyderabad , லக்னோ Lucknow Super Giants ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களம் காண்கின்றன. பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும். சென்னை அணி இதுவரையில் […]

விளையாட்டு

இறுதி பந்துவரை பரபரப்பு: ராஜஸ்தான் அணி வெற்றி!

  • April 5, 2026
  • 0 Comments

குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணி வெற்றிபெற்றுள்ளது. IPL தொடரின் 9 ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி தலைவர் ரியான் பராக் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களைப் பெற்றது. கடினமான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் […]

உலகம் செய்தி

அடிபணிய ஈரான் மறுப்பு: ட்ரம்பின் கோரிக்கை நிராகரிப்பு!

  • April 5, 2026
  • 0 Comments

மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம் எனக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஈரான். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், புதிய உடன்படிக்கையை எட்டுவதற்கும் 48 மணிநேரக் கெடுவை அமெரிக்க ஜனாதிபதி நேற்று விதித்திருந்தார். ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 10 நாள் கெடு முடியும் நிலையிலேயே மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் இணங்காவிட்டால் ஈரானின் முக்கியக் கட்டமைப்புகளைத் தகர்த்து, கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் மேற்படி […]