இந்தியா

07 ஆண்டுகளுக்கு பின் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா!

மத்திய கிழக்கு மோதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளன.

இந்திய பெட்ரோலிய அமைச்சகம் குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான  இந்தியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த  2019 முதல் ஈரானுடனான எரிபொருள் கொள்வனவை இந்தியா நிறுத்தியிருந்தது.

இருப்பினும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக  ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளது.

விநியோகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, அமெரிக்கா கடந்த மாதம் ஈரானிய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே