ஐரோப்பா

“கடைசி எச்சரிக்கை மொழியைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்” – ரஷ்யா அழைப்பு!

அமெரிக்கா – ஈரான் இடையிலான   மோதலைத் தணிப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கும் என்று ரஷ்யா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

“கடைசி எச்சரிக்கை மொழியைக் கைவிட்டு, நிலைமையை பேச்சுவார்த்தைப் பாதைக்குத் திருப்புவதன் மூலம்” அமெரிக்கா பங்களிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) ஆகியோருக்கு இடையேயான உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான எஞ்சிய வாய்ப்புகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை, தவிர்க்குமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உட்பட பல தரப்பினர் வலியுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“மத்திய கிழக்கில் நிலைமையை நீண்டகால மற்றும் நிலையான முறையில் இயல்பாக்குவதன் நலன்களுக்காக” பதற்றங்களைத் தணிக்கும் முயற்சிகளை ரஷ்யா ஆதரிப்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்