உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈராக்கிற்கு அனுமதி – எண்ணெய் ஏற்றுமதி மீள ஆரம்பம்!

  • April 6, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி வழியூடான எண்ணெய் போக்குவரத்திற்கு ஈராக்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனமான சோமோ (SOMO), வாடிக்கையாளர்களிடம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அட்டவணைகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஸ்ரா எண்ணெய் முனையம் (BOT) மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள் உட்பட அனைத்து ஏற்றுமதி முனையங்களும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன. எந்தவொரு வரம்புமின்றி அனைத்து ஒப்பந்த ஏற்றுமதித் திட்டங்களையும் செயல்படுத்த சோமோ முழுத் தயார் நிலையில் உள்ளது என்பதையும் […]

உலகம் செய்தி

உடனடி போர் நிறுத்தம்: ரஷ்யா, சீனா கூட்டாக வலியுறுத்து!

  • April 6, 2026
  • 0 Comments

மேற்காசிய போர்ச்சூழல் சூழல் மற்றும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சீனா மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான இவ்விரு நாடுகளும், இந்தப் பிரச்சனையில் நேர்மையான மற்றும் சமநிலையான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்யவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் உடனடி போர்நிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். […]

ஐரோப்பா

03 மணிநேரத்தில் 148 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்! ரஷ்யாவில் மின்துண்டிப்பு!

  • April 6, 2026
  • 0 Comments

உக்ரைன் இராணுவம் இன்று அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சுமார் 03 மணிநேரத்தில் 148 ட்ரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட மின்வெட்டுகளால்   அரை மில்லியன் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அவசரகாலக் குழுவினர் மின்சாரத்தை மீட்டெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் (Belgorod) இந்த தாக்குதல்கள் முனனெடுக்கப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினமும் 148 […]

விளையாட்டு

சரித்திரம் படைத்த புவனேஷ்வர் குமார்!

  • April 6, 2026
  • 0 Comments

IPL வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இதுவரை 192 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், 27.25 என்ற சராசரியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் […]

இலங்கை

வத்தளையில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

  • April 6, 2026
  • 0 Comments

வத்தளை, மாபோல தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (06) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

செய்தி விளையாட்டு

ஈரானின் கோரிக்கையை ஏற்குமா FIFA?

  • April 6, 2026
  • 0 Comments

2026 கால்பந்து உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்காவில் தமது அணி பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தே இதற்குரிய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை FIFA ஏற்றால் மட்டுமே தமது அணி உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருப்பதாகக் கருதும் ஈரான், வீரர்களின் பாதுகாப்பு குறித்த உறுதியான […]

விளையாட்டு

தொடர் தோல்விகளால் திண்டாடும் CSK!

  • April 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி மண்கவ்வியுள்ளது. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் அவ்வணி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றது. சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அணியை விளாசித்தள்ளி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் Royal Challengers Bangalore (RCB) மற்றும் chennai super kings (CSK) அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிஎஸ்கே தலைவர் Ruturaj Gaikwad பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பெடுத்தாடிய RCB. அணி, […]

இலங்கை செய்தி

இலங்கையில் எகிறும் வாழ்க்கைச் செலவு!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய லிற்றோ LITRO மற்றும் லாப்ஸ் LAUGFS கேஸ் நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளன. இதற்கமைய 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,765 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,5 கிலோ லிற்றோ எரிவாயு விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1910 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 2.3 […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையும் ஈரானின் முற்றுகையும் – எரிசக்தி விலை உயர்வு, பெரும் அழுத்தத்தில் உலக பொருளாதாரம்

  • April 5, 2026
  • 0 Comments

முக்கிய சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸை ஈரான் முற்றுகையிட்டுள்ளதால், எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து உலக பொருளாதாரத்தின் மீது பெரும் அழுத்தம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, இந்த கால்வாயில் “தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்கான சாத்தியமான வழிகள்” குறித்து விவாதிக்க, ஈரான் மற்றும் ஓமானின் துணை வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்ததாக ஓமான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினரும் நிபுணர்களுடன் கலந்துகொண்டு, பல தொலைநோக்குப் பார்வைகள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது. […]

இலங்கை செய்தி

புதையல் தோண்டிய 11 பேர் கைது

  • April 5, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அதிகாலை திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்ஹாவலை, திக்கோடை பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது […]