இலங்கையை உலுக்கிய ரத்துபஸ்வல விவகாரம்: இராணுவ வீரர்கள் விடுதலை
2013 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்ட ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்று 11 வருடங்களின் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளான நிமல் ரணவீர, நிஷாந்த ஹப்புஆராச்சி மற்றும் சஹான் மாபா ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட் […]













