ஆஸ்திரேலியா செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் அறிவிடக்கூடாது: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டுள்ளமை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese வரவேற்றுள்ளார். “தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் கட்டணங்கள் இல்லாத சூழலை நாங்கள் விரும்புகிறோம். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிட்னியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். “ ஆசியாவிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் வர்த்தகப் பொருட்களில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றது. எனவே, அங்கு ஏற்படும் பாதிப்புகள் ஆசியாவிற்கு அதிக அழுத்தத்தை அளிக்கின்றன.”எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேற்காசிய மோதலை […]

இலங்கை செய்தி

மலையக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 18, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், மலையக பிரதிநிதிகளை கூட்டாக சந்திக்கவுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையே அவர் இவ்வாறு சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் நாளை (18) பிற்பகல் 2 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. மலையக தமிழர்களுக்காக இந்தியாவின் உதவித் திட்டங்கள், வீட்டும் திட்டம், இந்திய புலமைப்பரிசில் மற்றும் காணி உரிமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்பொது கலந்துரையாடப்படவுள்ளன. இந்திய துணை குடியரசுத் தலைவர் […]

உலகம் செய்தி

யுரேனியத்தை கையளிக்கமாட்டோம்: ஈரான் திட்டவட்டம்!

  • April 18, 2026
  • 0 Comments

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தெரிவிக்கும் கருத்தை ஈரான் அரசு முற்றாக மறுத்துள்ளது. நாட்டின் அணுசக்தி திட்டத்தை நிறுத்துவது தங்களின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானது என்று ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டின் நிலப்பரப்பிற்கு இணையாகக் கருதுவதாகவும், அதனை எக்காரணம் கொண்டும் கைவிட முடியாது என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஈரானிய தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் […]

இலங்கை

நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

  • April 18, 2026
  • 0 Comments

இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல்  பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையைக் கருத்தில் கொள்ளாதிருக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் வாகன […]

உலகம் செய்தி

ஹார்முஸ்  திறப்பு: ஜேர்மன் வரவேற்பு 

  • April 17, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் முன்னணி கப்பல் நிறுவனமான ஹபாக்-லாய்ட், ஹாரீமுஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது நல்ல செய்தி என்று தெரிவித்துள்ளது. பணியாளர்கள், கப்பல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சரக்குகளின் பாதுகாப்பு தங்களின் முதன்மை கவனமாகவே இருக்கும் என்றும் நிறுவனம் கூறியது. உலகின் ஐந்தாவது பெரிய கப்பல் நிறுவனமான இதன் ஆறு கப்பல்கள், ஈரான் போரின் தொடக்கத்திலிருந்து வளைகுடா பகுதியில் சிக்கியுள்ளன. நீரிணைக்குத் திரும்புவதற்கு முன் சில முக்கிய கேள்விகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன என்றும், அவை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெளிவாகலாம் […]

உலகம்

ஈரான் மீதான முற்றுகை – 10,000 துருப்புகள் களத்தில்!

  • April 17, 2026
  • 0 Comments

ஈரான் மீதான முற்றுகையை அமுல்படுத்துவதற்காக 10000இற்கும் மேற்பட்ட துருப்புகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது கடற்படை முற்றுகையிடுவதில் பங்கேற்று வருவதாகக் கூறப்படும் ஒரு விமானம் தாங்கி கப்பலின் புகைப்படத்தை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) பகிர்ந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி இப்போது வர்த்தகக் கப்பல்களுக்குத் திறக்கப்பட்டுவிட்டது என்ற ஈரானின் அறிவிப்பு இருந்தபோதிலும், முற்றுகை தொடரும் என்று ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.    

இலங்கை

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

மேற்காசிய நாடுகளில் நிலவிய தொடர் பதற்றங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்று ஐ.நா அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் இராணுவ மோதல் அதிகரிப்பு: ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் மனித மேம்பாட்டு தாக்கங்கள்” என்ற தலைப்பில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,   2025-ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து   வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்களில் 80.2 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதால், இலங்கை அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

எரிசக்தி அமைச்சரின் இராஜினாமா : அனுர பொறுப்பேற்பாரா?

  • April 17, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவரின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் ராஜினாமா வரவேற்கத்தக்கது என்றாலும், அது மிகவும் தாமதமாக வந்துள்ளது என்றார். எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் விவாதித்ததாகவும், ஆனால் அனைத்து NPP நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்ததன் மூலம், “அவர்கள் […]

உலகம்

நேட்டோ கூட்டணி பயனற்றது – ட்ரம்ப் கருத்து!

  • April 17, 2026
  • 0 Comments

நேட்டோ கூட்டணி பயனற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் இப்போது முடிந்துவிட்டதால், எங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா என்று கேட்டு நேட்டோவிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பயனற்ற’ நேட்டோ ‘விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் ‘தங்கள் கப்பல்களில் எண்ணெயை ஏற்ற மட்டுமே விரும்புகிறார்கள்’ எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய நாட்களில் […]

வாழ்வியல்

காலையில் தேன் குடிப்பது எடையைக் குறைக்க ஒரு ‘மேஜிக்’ தீர்வா? நிபுணர்கள் விளக்கம்!

  • April 17, 2026
  • 0 Comments

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் காரியம், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது. இது பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்றாலும், இது உண்மையில் எடையைக் குறைக்கிறதா அல்லது இது ஒரு வெறும் நம்பிக்கையா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் சமீபத்திய ஆய்வுகள் கூறும் தகவல்கள் என்ன? தேன் ஒரு இயற்கை இனிப்பு என்றாலும், அதில் சர்க்கரையை விடக் குறைவான கிளைசெமிக் குறியீடு […]