ஹார்முஸ் திறப்பு: ஜேர்மன் வரவேற்பு
ஜெர்மனியின் முன்னணி கப்பல் நிறுவனமான ஹபாக்-லாய்ட், ஹாரீமுஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது நல்ல செய்தி என்று தெரிவித்துள்ளது.
பணியாளர்கள், கப்பல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சரக்குகளின் பாதுகாப்பு தங்களின் முதன்மை கவனமாகவே இருக்கும் என்றும் நிறுவனம் கூறியது.
உலகின் ஐந்தாவது பெரிய கப்பல் நிறுவனமான இதன் ஆறு கப்பல்கள், ஈரான் போரின் தொடக்கத்திலிருந்து வளைகுடா பகுதியில் சிக்கியுள்ளன.
நீரிணைக்குத் திரும்புவதற்கு முன் சில முக்கிய கேள்விகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன என்றும், அவை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெளிவாகலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காப்பீடு பாதுகாப்பு மற்றும் கடல்வழிப் பாதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் ஈரானிய அதிகாரிகளிடமிருந்து தெளிவான விளக்கம் பெற வேண்டியது முக்கியமாக உள்ளது. இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முடிந்தவரை விரைவில் நீரிணை வழியாக மீண்டும் பயணத்தைத் தொடங்க நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், அனைத்து கப்பல் நிறுவனங்களும் இதே நிலைப்பாட்டில் இல்லை, பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு நிறுவனம், தற்போதைய நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.




