அரசியல் இலங்கை செய்தி

ஒற்றுமைக்கான முயற்சியை தகர்த்தது தமிழ்க் காங்கிரஸ்: தமிழரசுக் கட்சி விசனம்!

  • April 18, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- […]

இலங்கை செய்தி

“மன்னாரில் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்”

  • April 18, 2026
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் […]

இலங்கை செய்தி

அரசியல் தீர்வு திட்ட முயற்சியை குழப்பியடிக்காதீர்: சுரேஷ் கோரிக்கை!

  • April 18, 2026
  • 0 Comments

பொதுத்தீர்வு ஆவணத்தை உருவாக்குவதற்கான தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஐக்கிய முயற்சியை முறியடிக்க வேண்டாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் சாசனத்திற்கு முன் வைக்கப்பட வேண்டிய பொதுத் தீர்வு ஆவணத்தை உருவாக்கும் கூட்டு நடவடிக்கையை தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் ‘ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு […]

இலங்கை செய்தி

கொழும்பில் விசேட போக்குவரத்து

  • April 18, 2026
  • 0 Comments

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி நாளை (19) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார். இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் […]

உலகம் செய்தி

இராணுவ தினச் செய்தியில் எச்சரிக்கை – கமெனியின் மறைமுகப் பதில், முக்கிய விவகாரங்களில் மௌனம்

  • April 18, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி எழுதியதாகக் கூறப்படும் ஒரு புதிய செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் இராணுவ தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தச் செய்தியில், ஹார்முஸ் நீரிணை அல்லது ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தைகள் குறித்து நேரடி குறிப்புகள் இடம்பெறவில்லை. ஆனால், “எதிரிகள் புதிய தோல்விகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கும் வகையில், ஈரானிய கடற்படை தயாராக இருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பதவியேற்றதிலிருந்து, மொஜ்தபா கமெனி பொதுவெளியில் தோன்றாத நிலையில், இத்தகைய எழுத்துப்பூர்வ அறிவிப்புகள் […]

ஐரோப்பா செய்தி

டேங்கர் மீது தாக்குதல் – ஹார்முஸ் பகுதியில் பதற்றம் அதிகரிப்பு

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துப்பாக்கிப் படகுகள், ஓமானின் வடகிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த டேங்கர் கப்பலை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தாக்குதலுக்கு உள்ளான கப்பலும் அதில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, நீரிணையை கடக்க முயன்ற  இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதும் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் பாதுகாப்பு அனுமதி சர்ச்சை – நீக்கப்பட்ட அதிகாரி நாடாளுமன்றத்தில் விளக்கம்?

  • April 18, 2026
  • 0 Comments

பீட்டர் மண்டேல்சனுக்குப் பாதுகாப்பு அனுமதி வழங்கியதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியுறவு அலுவலகத்தின் தலைமை அரசு ஊழியரான சர் ஆலி ராபின்ஸ், ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை இரவு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் யெவெட் கூப்பர் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதேவேளை, பீட்டர் மண்டேல்சன் தொடர்பான தகுதி சரிபார்ப்பு […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை, ஈரான் ராணுவம் மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கை தொடர்வதாலேயே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையை கடல் கொள்ளை என ஈரானிய புரட்சிகர காவல் படை விமர்சித்துள்ளது. தமது துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்த்து, இப்பாதையை மூடுவதாக ஈரான் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் நேற்று மீண்டும் திறந்தது. […]

உலகம்

பாதுகாப்பு என்ற போர்வையில் நிலங்களை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல்!

  • April 18, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பாதுகாப்பு” என்ற போர்வையில்  மேலும் நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ( Hakan Fidan) குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இஸ்ரேல் தனது சொந்தப் பாதுகாப்பை நாடவில்லை.  நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக, நெதன்யாகு அரசாங்கம் பாதுகாப்பை ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே லெபனானுடன் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருந்த போதிலும், தெற்கு லெபனானில் தான்  கைப்பற்றிய” அனைத்து நிலைகளையும் இஸ்ரேல் தொடர்ந்து தக்கவைத்துக் […]