ஈரான் மீதான முற்றுகை – 10,000 துருப்புகள் களத்தில்!
ஈரான் மீதான முற்றுகையை அமுல்படுத்துவதற்காக 10000இற்கும் மேற்பட்ட துருப்புகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது கடற்படை முற்றுகையிடுவதில் பங்கேற்று வருவதாகக் கூறப்படும் ஒரு விமானம் தாங்கி கப்பலின் புகைப்படத்தை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) பகிர்ந்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி இப்போது வர்த்தகக் கப்பல்களுக்குத் திறக்கப்பட்டுவிட்டது என்ற ஈரானின் அறிவிப்பு இருந்தபோதிலும், முற்றுகை தொடரும் என்று ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.




